அம்மாவே தெய்வம் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

சீனாவில் வசிக்கும் வாங் டியான்ஃபாங் என்பவருக்கு முப்பது வயதாகி விட்டது. ஆனாலும் இன்றும் நான்கு வயது குழந்தையைப்போன்று தோற்றமளிக்கிறார். இவரால் பேச முடியாது. அதிக நேரம் எழுந்து நிற்க முடியாது. 24 மணிநேரமும் இவரை இவரது தாய் கவனித்துக் கொள்கிறார்.

"இரண்டு வயதிலேயே என் மகனின் மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் நின்றுவிட்டது. ஏராளமான மருத்துவர்களைப் பார்த்தும் இன்றும் இதற்கான பிரச்சினை என்ன, இதைக் குணப்படுத்துவதற்கான மருத்துவம் என்ன எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று வயதிலேயே இவனுக்காக நான் படும் துன்பத்தைக் கண்ட என் உறவினர்கள், இவனைப் புத்தர் ஆலயத்தில் விட்டுவிடும்படி வற்புறுத்தினார்கள். இன்னொரு ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றுக்கொள்ள வற்புறுத்தினார்கள். அவர்கள் சொன்னதை நான் மறுத்துவிட்டேன். எப்படியும் இவனது நோயைக் குணமாக்க முடியாது என்று எனக்குத் தெரியும். இன்னும் எத்தனை காலம் அவன் உயிரோடிருப்பான் என்று தெரியாது. எனவே, நாள் இருக்கும்வரை அவனை நான் பார்த்துக்கொள்வேன்" என்கிறார் இவரது தாய் சு ஸியாவோபிங்.

ஒரு தேயிலைத் தோட்டத்திலும் ஒரு வீட்டிலும் வேலை பார்க்கின்ற சு ஸியாவோபிங் வறுமையிலும் தன் மகனைக் கரிசனையோடு பாதுகாத்து வருகிறார். இதற்காகத்தான் அம்மாவைத் தெய்வம் என்று சொன்னார்களோ!

ஆயிரம் சாமிகள் என் கண்ணுக்குத் தெரிந்தாலும்,
என் முதல் சாமி நீதானே அம்மா.


"உலகெல்லாம் உதிப்பிடம் தாய்மை! உதித்துத் தங்கி ஒழுகுமிடம் தூய்மை! கலையின் மூலம் கமழுமிடம் தாய்மை! கடவுளன்பு சுரக்குமிடம் தாய்மை!" - திரு.வி.க.