தாழ்ச்சியின்றி நமக்கு மாட்சி இல்லை! | ஆர்கே. சாமி | Veritas Tamil

12 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 19 ஆம் வாரம் –செவ்வாய்
இணைச்சட்டம் 31: 1-8
மத்தேயு 18: 1-5, 10-14
தாழ்ச்சியின்றி நமக்கு மாட்சி இல்லை!
முதல் வாசகம்.
இணைச்சட்ட நூலின் வாசகத்தில், கடந்த நாற்பது ஆண்டுகளாக "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின்" தலைவரான மோசே, இஸ்ரயேலருக்குத் தனது கடைசி வார்த்தைகளை மொழிகிறார. அவர்களை அன்றுவரை வழிநடத்தி காப்பாற்றியது அவர் (மோசே) அல்ல, மாறாக உண்மையான தலைவராகவுப் இருந்தவர் மற்றும் இருப்பவர் ஆண்டவராகிய கட்டவுள் என்பதை அவர்கள் உணரச் செய்கிறார்.
கடவுளின் தலைமை யோசுவாவில் நிறைவேறும் என்பதை வலியுறுத்தி உரையாற்றுகிறார், அதே வேளையில், மக்களுக்காக கடவுள் தனக்குக் கொடுக்கும் வழிநடத்துதலை பொறுப்போடு ஏற்று மக்களை வழிநடத்தவும் மோசே யோசுவாவை வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், சீடர்கள், "விண்ணக அரசில் யார் பெரியவர்?" என்று சீடர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க, இயேசு ஒரு குழந்தையைத் தம் சீடர்களுக்கு முன்பாகக் கொண்டு வந்து, குழந்தைகளின் வெளிப்படைத்தன்மையையும் ஏற்றுக்கொள்ளும் முறைகளையும் ஒப்பிட்டுப்பேசுகிறார். மேலும், ஒரு குழந்தையின் எளிய நம்பிக்கையைப் பெறுவதற்கு தங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தம்மைப் பின்பற்றுபவர்களிடம் கூறுகிறார்.
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! என்று எச்சரிக்கிறார். அத்துடன தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு, காணாமல் போன ஆடுகளைத் தேடிச் செல்லும் மேய்ப்பனின் செய்தியை அவர் பகிர்ந்து கொள்கிறார்.
வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் சென்று, அதைக் கண்டுபிடித்தால், வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதை விட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என்கிறார்.
சிந்தனைக்கு.
இந்தப் பகுதி, பணிவு, உள்ளடக்கம் மற்றும் ஒவ்வொரு தனிநபரிடமும் கடவுளின் அக்கறை – ஆகியவற்றை நமக்கு விவரிக்கிறது. தொலைந்து போன ஒன்றைத் தேடுவதற்காக தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுச் செல்லும் மேய்ப்பனின் உருவகத்துடன் அவர் முடிக்கிறார்.
வழிதவறிச் செல்வது மிகவும் எளிது. தொலைந்து, குழப்பமடைந்து, மேய்ப்பரின் அலைந்து திரியும் பல ஆன்மாக்கள் உள்ளன. ஒருவேளை இந்த வழிதவறலுக்கு பல காரணங்கள் இருக்கலாம், அவற்றில் மோகம் குறிப்பாக , பணத்தில் மோகம், பெருமை, கோபம் மற்றும் சுயநலத்திற்கான வேட்கை, இப்படி பல உள்ளன. இன்றைய நற்செய்தி வாசகம் மக்கள் வழிதவறிச் செல்வதைப் பற்றியது அல்ல; மாறாக, அவர்களை மீண்டும் வெல்லும் கடவுளின் விருப்பத்தைப் பற்றியதாக உள்ளது. கடவுள் வழிதவறுவோரை புறக்கணிப்பவர் அல்ல. மாறாக, தேடிச் செல்பவராக இங்கு இயேசு வெளிப்படுத்துகிறார்.
நாம் கடவுளிடமிருந்து விலகிச் செல்லும்போது, நாம் பாதுகாப்பு அற்றவராக தனித்து விடப்படுகிறோம். அதுதான் நமது மனித இயல்பு. வாழ்க்கையில் திருப்தி அடைவதற்கான ஒரே வழி, அன்பினால் நம்மை கடவுளுக்குக் கொடுப்பதுதான். எனவே , நாம் வழிதவறினாலும் மனந்திருப்பி வரும்போது கடவுள் நம் கரம்படித்து மேல் எழுப்புவார் என்பது திண்ணம்.
ஆனால், நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி கடவுளிடம் திரும்புவதற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக இருப்பது நமது தற்பெருமை. பலருக்கு வழிதவறிச் சென்றதை ஒப்புக்கொள்வது கடினம்தான். அவ்வாறே, நாம் செய்ததை ஏற்றுக்கொண்டு, கடவுளிடம் அவரது மன்னிப்பு மற்றும் இரக்கத்திற்காக திரும்புவதும் கடினம்தான். ஆனால் இன்றைய நற்செய்தியில் மிக முக்கியமான உருவகம் மேய்ப்பனின் மகிழ்ச்சி. நாம் மனந்திரும்பி வரும்போது, நம்மைவிட அதிகம் மகிழ்ச்சிக்குரியவர் ஆண்டவர்தான் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார்.
முதல் வாசகத்தில் மொசே இறப்பதற்கு முன்னால். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தினார். இத்தனைக்கும் மக்கள் அவர்க்கெதிராக முறுமுறுத்தாலும் அவர் மிகவும் அமைதியாய் இருந்து வழிநடத்தினார். இந்நிலையில் அவருக்கு வயது ஏறிவிட்டதால் இஸ்ரயேல் மக்களை முன்னின்று வழிநடத்தும் பொறுப்பை அவர் யோசுவாவிடம் ஒப்படைக்கின்றார். இவ்வாறு கடவுள் அவர்களின் தீயச் செய்ல்களை நினைவுகூராமல் அவர்களை வழிநடத்த யோசுவாவை ஏற்படுத்துகிறார். கடவிளின் இரக்கமும் மன்னிப்பும் இஙகே வெளிப்படுகிறது. நல்லோரை அவர் மீட்டெடுப்பவர் என்பது வெள்ளிடைமலை.
நிறைவாக, மறைநூல் அறிஞர்களும், குருக்களும், பரிசேயர்களும்தான் சமூகத்தில் பெரியவர்’ என்று எளிய சீடர்கள் நினைத்திருக்கக்கூடும். ஆனால், ஆண்டவர் இயேசு, சிறு பிள்ளையைப் போன்று அவர்களைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் பெரியவர் என்றும் கூறுகின்றார். ஆகவே, மண்ணக வாழ்வே விண்ணக வாழ்வுக்கு வழி வகுக்கிறது என்பதையும், தாழ்ச்சியின்றி நமக்கு மாட்சி இல்லை என்பதையும் நினைவில் நிறுத்துவோம்.
இறைவேண்டல்.
நல்லாயனாகிய இயேசுவே, நான் வழிதவறிச் சென்ற காலங்களுக்காக உம்மிடம் மன்னிப்பும் இரக்கமும் வேண்டுகிறேன். ஆமென்..
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
