முயன்று பார் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.04.2024

கப்பல் மூழ்கி விடும் என்று நினைத்தால் கடற்ப்பயணம் நிம்மதி இருக்காது.

விமானம் வெடித்து விடும் என்று நினைத்தால் வானினூர்திப் பயணம் நிம்மதி இருக்காது. 

அதுபோல வாழ்க்கையும் கஷ்டம் என்று நினைத்தால் வாழ்க்கையைப் பயணம் நிம்மதி இருக்காது.

தனக்கு மட்டும் தான் கஷ்ட காலம் என்று நினைத்துப் புலம்பாதே.

சற்று சுற்றிப் பார்

ஒவ்வொரு இதயமும் கடலளவு கஷ்டத்தை
சுமந்து கொண்டு தான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகின்றது.

ஆகையால் முடியாது என்று எதையும் விட்டு விடாதே முயன்று பார் நிச்சயம் முடியும்.

லட்சியம் இருக்கும் இடத்தில அலட்சியம் இருக்காது. வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே.
ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் வாழ்வும் நம்பிக்கையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி