குடும்பதின் ஆணிவேர் சகோதர சகோதரிகளின் உறவில்... | பாரதி மேரி | VeritasTamil

குடும்பதின் ஆணிவேர் சகோதர சகோதரிகளின் உறவில்...
ஒரு குடும்பத்தில் நாம் மரத்தின் கிளை போன்றவர்கள் ஆனால் நாம் அந்த மரத்தின் ஆணிவேர் போல ஆழமாய் வேரூன்றியவர்கள்.
நாங்கள் மொத்தம் மூன்று பிள்ளைகள், இப்போது நாங்கள் வளர்ந்துவிட்டோம். இருப்பினும் எங்கள் உறவின் ஒன்றிப்பு அதிகமாய் உள்ளது. குடும்பங்கள் ஒன்று சேர்வது சகோதர அன்பால் தான். என் அம்மா எப்போதும் விரும்புகிற ஒன்று எந்த சூழ்நிலையிலும் நீங்கள் பிரியாமல் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று. என் அம்மா தனி குழந்தையாக பிறந்தவர்கள் அவர்கள் ஒரே பிள்ளை தான், பல முறை எங்களிடம் தன் தனிமையின் வெறுமையை பகிர்ந்து கொண்டதுண்டு. தன் தாய் மற்றும் தந்தை வேலைக்கு போகும் போதும் அவர் வீட்டில் இருந்த தனிமையான சூழல் மற்றும் சாப்டிய என்று கூட யாரும் கேட்காத நிலைமை என்று அவர்கள் கூறும் ஆதாங்க குரல் எங்களை இன்னும் அதிகம் இறுகியது அன்பால். எங்களுகுள்ளும் சண்டைகள் வரும் மண்டைகள் உடையும்... இருப்பினும் ஒருவர் மனதளவில் உடலளவிலும் உடைந்தால் அனைவரும் உடைந்து விடுவோம்.
ஒரு குடும்பத்தின் சகோதர ( தரி) அன்பு எப்படி வலுப்படும் என்ற சில வழி முறைகள்..
1. அனைவரும் ஒன்றாய் இருத்தல் : (Unity) சூழல்கள் நம்மை பிரிக்கலாம், திருமணம் வேலை என்று phyiscally நாம் பிரிந்தாலும் மனதளவில் ஒன்றுபட்டு இருபது.
2. பொறுப்புக்களை பகிர்ந்துகொண்டு (sharing your responsibility and accountability) வாழுதல் மற்றும் அனைவரும் தன் பொறுப்பை உணர்ந்து பெற்றோருக்கு உதவுதல் மேலும் அனைத்து பாரங்களையும் ஒரே நபர் மேல் தினிக்காமல் இருத்தல்.
3. பொறாமை ( Avoid jealous) அறவே இருக்கக்கூடாது. சரித்திரத்தில் பல சகோதர உறவுகள் உடைந்தது இந்த பொறாமை மனப்பான்மையால் தான்.
4. ஒருவரை ஒருவர் பாராட்டுவது ( complement) , அவர்கள் சிறு காரியங்களில் வெற்றி பெற்றாலும் இவ்வாறு ஊக்குவிக்கும் போது பெரிய காரியங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வரும்.
5 நேர்மை மற்றும் உண்மையாக ( honesty and loyality) இருக்க வேண்டும் எந்த சூழலிலும் பொய் சொல்லாமல், ஏமாற்றாமல் இருந்தால் நல்லது.
எனவே இவ்வாறு ஒன்று பட்டு வாழும் குடும்பம் எந்த சூழலிலும் விரிசல் படாமல் இணைந்து வாழும்...
- இர பாரதி.
Daily Program
