கைவிடப்பட்ட முதியோர் மற்றும் சிறப்பு குழந்தைகள் இல்லத்தை சந்தியுங்கள்|இம்மானுவேல்|veritastamil

கைவிடப்பட்ட முதியோர் மற்றும் சிறப்பு குழந்தைகள் இல்லத்தை சந்தியுங்கள்

இன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில் நாம் செல்வம் புகழுக்காக ஓடிக்கொண்டிருக்கின்றோம் .இதனால் மனஅழுத்தம் தேவையற்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறது. நம்மை சுற்றி ஒரு சிறு பிரச்சனை வந்தாலும் அதை தாங்கிக்கொள்ளாமல் மனதில் போட்டுகொண்டு நாம் நம் எதிர்கால வாழக்கையை அழித்து விடுகின்றோம்..

தவக்காலம் வந்தாலே அனைத்து பங்குகளும் திருயாத்திரையாக ஆலயங்களுக்கு செல்வது வழக்கமாக இருக்கும் எம் பங்கில் இவ்வருடம் ஒரு மாறுப்பட்ட திருயாத்திரையாக அனாதை இல்லங்கள் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் HIV நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காண சென்றிருந்தோம்

பொருள் பதவி இவைதான் இந்த உலகம் என்று நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு .உறவுகள் இழந்து தன்னை நேசிக்க யாரவது வருவார்களா என்று கண்ணீர் விடும் முதியவர்கள் எத்தனையோ  பேர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தேவை உறவுகள் பணம் அல்ல அரவணைப்பு அன்பான வார்த்தைகளுக்கு மட்டுமே அவர்கள் ஏங்குகின்றார்கள் 

எந்த தவறும் செய்யாமல் HIV நோயினால் பாதிக்க பட்டிருக்கும் குழந்தைகளை சந்தித்தோம்  அவர்கள் சிரிப்பை காணும்போது என் மனதிற்குள் எழுந்த ஒரு கேள்வி . சிறிய பிரச்சனை வந்தாலும் ஓடி ஒலியும் நமக்கு அந்த குழந்தைகளின் சிரிப்பை பார்க்கும் போது நம் கஷ்டங்கள் ஒரு குப்பையே என்று என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது . பல்வேறு நேரங்களில் நாம் நம் மனதை போட்டு குழப்பி கொண்டிருக்கின்றோம் உடலில் ஒரு சிறிய மாற்றம் வந்தால் ஒடனே போனை எடுத்து GOOGLE  இல் SEARCH பண்ணி என்ன நோய்யாக இருக்கும் என்று நம் மனதை நாமே போட்டு  குழப்பி குழப்பி மகிழ்ச்சியை குலைத்துக்கொண்டிருக்கின்றோம். இல்லாத நோயை நாமே வரவைத்து விடுகின்றோம் நம் கஷ்டங்களை காட்டிலும் முதியோர் இல்லங்களிலும் சிறப்பு குழந்தை இல்லங்களிலும் அவதி பாடுபவர்களின் கஷ்டங்களை பார்க்கும்போது நம் கஷ்டங்கள் அற்பமானவை வாழும் ஒவ்வொரு நாளையும் மனதைரியதுடன் நாம் ஏற்று துணிந்து வாழ்வோம் .

கைவிடப்பட்ட இல்லங்களை சந்தியுங்கள் உறவுகளை இழந்து வாடும் அவர்களுக்கும் உறவுகளாக இருங்கள்..

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

 

-இரா இம்மான்