வாசிப்பை நேசிப்போமா! | Veritas tamil

ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அனைத்து மாணவர்களும் மிக்க கவனமாகக் கவனித்துக்கொண்டிருந்தனர். ஆசிரியர் பாடம் நடத்தியபோது சில மாணவர்கள் கவனக்குறைவாக இருந்தனர். மற்ற மாணவர்கள் கவனத்துடன் பாடங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

எடுத்த பாடங்களை மாணவர்களிடம் வாசிக்கக் கூறினார். சில மாணவர்கள் தெளிவாகத் தவறின்றி வாசித்தனர். அப்போது ஆசிரியர், மாணவர்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க சில தலைவர்களின் வாழ்க்கையினை எடுத்துக்கூறினார்.

அடிமைகளின் சூரியன் எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன் புத்தகங்கள் படித்தே தேசப்பற்றை உருவாக்கி அமெரிக்காவின் குடியரசுத் தலைவரானார்.காஞ்சிபுரத்திலிருந்து முதுகலைபட்டதாரியான அண்ணாதுரை, சென்னை வந்து சென்னை கன்னிமாரா நூலகத்திலுள்ள நூல்களைப் படித்தே அறிவாளியானார். தமிழக முதலமைச்சரானார். இந்தியாவின் முதல் பிரதம அமைச்சர் ஜவஹர்லால் நேரு, "நான் மறைந்தபின் உடல்மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம் புத்தகங்களைப் பரப்புங்கள்" என்றார்.

"இவ்வாறு புத்தகங்களைப் படித்தவர்கள் தங்கள் வரலாற்றை மாற்றியுள்ளார்கள். நமது அறிவை விருத்தியடையச் செய்யவும், சிந்தனை மேலோங்கவும் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாமல் வேறு பல நல்ல நூல்களை, நூலகங்களில் எடுத்தும், விலைக்கு வாங்கியும் படிக்கப் பழகுங்கள்” என்றார் ஆசிரியர். வாசிப்பதால் சொல்திறன் வளரும், ஞாபகசக்தி அதிகரிக்கும், மன அழுத்தம் குறையும், தனிமை நீங்கிவிடும். கற்பனை வளம் அதிகரிக்கும்.

எனவே, பிள்ளைகளே தினமும் 30 நிமிடமாவது நல்ல புத்தகங்களை வாசித்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்குப் பிறந்தநாள் பரிசாகப் புத்தகங்களைக் கொடுங்கள். நமது பள்ளிப் பாடங்களைப் படித்து முடித்தபின் ஓய்வு நேரத்தில் நல்ல புத்தகங்களை வாசியுங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தகத்தினம். டானிஷ் குழந்தை எழுத்தாளர் ஹானஸ் கிறிஸ்டியன் ஆன்டர் சென்னின் பிறந்த நாள் உலகக் குழந்தைகள் புத்தகத்தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாசிப்பை நேசியுங்கள் 1 வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

திருமதி. ஜோஸ்பின் சைமன்