எவ்வளவு வேகம்? | Veritas tamil

இந்த அசையினால் வந்த வேகம் எப்படி இருக்கிறது?

எவ்வளவு இதமாக இருக்கிறது இந்த தென்றல் காற்று! என்ன ஒரு அமைதியான ஊர் ! என தான் பிறந்து வளர்ந்து ஊரையே புதிதாக பார்ப்பதுபோல் திண்னையில் உட்கார்ந்து ரசித்துக் கொன்டிருந்தான் பிரவீன். புதியதாக தெரியாதா என்ன ! கடந்த ஐந்து வருடங்களாக சென்னை  நகர வாழ்க்கையிலே இருந்து விட்டு, மீண்டுமாக தன் சொந்த கிராமத்துக்கு வந்திருக்கிறான் .எல்லாமே புதியதாக பொலிவானதாக, தூய்மையானதாக, இயற்கை மிகுந்ததாக தெரிந்தது. வீட்டு முற்றத்தில் அம்மா தெளித்திருந்த சாணியின் வாசனை கூட அவனுக்கு பிடித்திருந்தது, எப்போதும் பரபரப்பாய் ஒடிக்கொண்டு, அவசர அவசரமாய் சட்டை மாட்டிக் கொண்டு, பாடி ஸ்பிரே அடித்துக் கொண்டு, வந்து நிற்கும் ஷிப்ட் வண்டியில் ஏறி, பல சிக்னல், டிராபிக் தாண்டி, எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் மெஷின்களுக்கு நடுவே வேலைசெய்து முடித்து அதே வண்டிகளின் ஒலிகளை கடந்து ரூமுக்கு வந்து இரவு 11 மணிக்கு அப்பாடா" என உறங்கச் செல்லும் பிரவீனுக்கு அமைதியாய் அமர்ந்து இளங்காற்றை இரசிப்பதில் எப்படி சுகம் இல்லாமல் போகும்!

வீடுமுன் விளையாடும் கோழிக்குஞ்சுகள், தூரத்தில் பூத்திருக்கும் சிறு சிறு பூக்கள் என அவன் ரசனைகள் விரிந்து செல்ல, அவன் கவனம் மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளின் பக்கம் சாய்ந்தது. "ஹெர்குலஸ்" என மின்னிய எழுத்துக்கள். சைக்கிள் ஓட்டி எவ்வளவு நாள் ஆயிச்சி..... ஆசை எட்டிப் பார்த்தது. "அம்மா, " அந்த சைக்கிள் யாருதும்மா? சமயலறையில் இருந்த அம்மாவிடம் சத்தமாக கேட்டான். மகன் "என்னடா? என்ன சொன்ன?" என்று கேட்டுக் கொண்டே வெளியேவர 
சைக்கிளைப் பார்த்து கையை நீட்டி, "அது யாரோடுதும்மா?" என்றுக் கேட்டான். 

அது பக்கத்து வீட்டு ரீனா வோடதுடா ஸ்கூலுக்கு இதுலதான் போறாள் என்று சொல்ல, எழுந்தவன் "ரீனாவுடையது தானா! என்று சொல்லி வேகமாக போய் சைக்களில் ஏறி உட்கார்ந்து கொண்டான். சைக்கிளின் சக்கரம் பூட்டப்படவில்லை என்பதை உணர்ந்தவனாய், "அம்மா, நான் கொஞ்சம் ஓட்டிட்டு வர்றேன்" என்று சொல்லி, சைக்கிளை எடுத்து அழுத்த ஆரம்பித்தான் மனதிற்குள் பழைய நினைவுகள், கால்கள் வேகமாக அழுத்த சைக்கிளை இயக்கினான். இரு கைகளையும் விட்டு ஓட்டி பார்த்தான். மனதிற்குள் மிக சந்தோஷம், ஓ.... என்று கத்தியும் விட்டான். பல மேடு பள்ளங்களும் ஏற்றிப் பார்த்தான், இவ்வாறாக சைக்கிள் பயணம் தொடர்ந்தது. இதுவரை இன்னும் இன்னும் எனச் சொல்லி மனதின் ஆசை, உடலின் களைப்பையும் உணர்ந்து 'போதும்' என முடிவெடுத்தது சைக்கிளின் வேகத்தைக் குறைத்து, கீழே இறங்கினான். சைக்கிளை திருப்பி, வீட்டிற்குச் செல்ல மீண்டும் சைக்கிளின் மேல் ஏறி. அமர்ந்தான். இவ்வளவு தூரம் வந்து விட்டோமே! இப்போதுதான் அவனுக்கு உரைத்தது. சைக்கிளை அழுத்த தொடங்கினான், சற்று கூடினமாக இருந்தது. முயன்று அழுத்தினான் ஆனால் முடியவில்லை. இறங்கி சக்கரத்தைப் பார்த்தான் பின் சக்கரத்தில் 70% காற்று இல்லை  என்ன செய்வது, தான் சைக்கிளை உருட்டிக் கொன்டே வீடு வந்து சேர்ந்தான். வீட்டிற்குள் நுழைய, எதிரே அம்மாவை கண்டு, "சைக்கிளை பஞ்சராக்கிட்டேன்ம்மா" என்று சொல்வதற்குள், டேய் பஞ்சரான சைக்கிளை எடுத்துக்குட்டு எங்கடா, போன? அது,பஞ்சர் பார்க்கனும்று சொல்லி அதை அப்பா வந்தா பஞ்சர் பார்க்க சொல்லிதான் ரீனா அங்க வீட்டுட்டு போனா" என்றார். - பஞ்சரான சைக்கிள் மீதான. ஆசை தான் பஞ்சரான சைக்கிளையும் அவ்வளவு வேகமாக இயக்கிருக்கிறது

வேகம்: ஆர்வம், அவசரம், உற்சாகம் மற்றும் உணர்ச்சியின் அறிகுறி.
உங்கள் வேகத்தை நிர்ணயிப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆசைக்குத்தான் எவ்வளவு வேகம்! ஆசை எவ்வளவாக இருந்தாலும் அதை நம் கட்டுப்படுத்தி நாம் பொறுமையுடன் செயல்படவேண்டும்.

 

எழுத்து: அருட்பணி. ராஜன் SdC