! உழைப்பை நம்புவோம்...|| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.06.2024

இடி மேலே படுவதால் எங்கோ புதைந்து கிடக்கும் காளான் கூட துளிர்க்கிறது.

அடிக்கும் தோல்விகள்  எல்லாம், உனக்குள்ளே இருக்கும் வெற்றியை வெளியே கொண்டு வரும்.

நடித்து மேலே வர முயற்ச்சிக்காதே
பிடித்து உழைத்து பார்.

உயிரற்ற காகிதம் மேலே பறப்பது காற்றடிப்பதால்.

ஆனால் உயிருள்ள பறவை மேலே பறப்பது அதன் முயற்சியால் அதனால் உயிருள்ள நாம் உழைப்பை நம்புவோம்.

தோல்விகள் தொடர்ந்து உன்னைத் துரத்துகிறதா அயராமல் ஓடு.

உனக்கு சற்று முன் தொலைவில் தான் வெற்றி ஓடிக் கொண்டிருக்கிறது.

விபத்து போல் வருவதில்லை வெற்றி. வியர்வையால் திறமையால் வருவதுவே வெற்றி.

துவண்டு போவதே ஒரு மனிதனுடைய மிகப் பெரிய பலவீனம். வெற்றிக்கான நிச்சய வழி தோல்வி அடைந்த பிறகும் இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது.

விடாமுயற்சியுடனும் தைரியத்துடனும் கனவுகளைத் துரத்திக் கொண்டு ஓடினால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் பொறுமையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.

மரியே வாழ்க


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி