வண்ணங்களும் எண்ணங்களும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.12.2024

வண்ணங்களில் அழகான
மனிதர்களை நேசிப்பதை விட,
எண்ணங்களில் அழகான மனிதர்களை நேசிப்பதே நம் 
ஒட்டுமொத்த வாழ்வை அழகாக்கும்.

மழைக்காலத்தில் மட்டுமே பறக்கும் ஈசலைப் போலத் தான், தங்களுடைய தேவைக்கு மட்டுமே பழகும் சிலர்.

கடந்து செல்வோம் அவர்களை.

நம்ம வாழ்க்கை நல்லா இருக்க எந்த அதிசயமும் தேவையில்லை.
நாம் எடுக்கும் முடிவுகள் சரியா
இருந்தாலே போதும்.

அடுத்தவன் உனக்காக உன்னுடைய வாழ்க்கையை வாழப் போவதில்லை.

உனக்குக் கஷ்டம் வரும் போது அடுத்தவன் வந்து உதவி செய்யப் போகிறதும் இல்லை.

பிறகு ஏன் அடுத்தவன் என்ன நினைப்பான் என்று யோசிக்கனும்.

பின்னால் பேசுபவன்,புகழ்ந்தால் என்ன இகழ்ந்தால் என்ன.
நீ முன்னேறி சென்று கொண்டே இரு 
வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் நற்ச்சிந்தனையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க


சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி