விட்டு விடுங்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.08.2024
நீங்கள் மன்னிக்கக் கற்றுக் கொண்டால், உங்களிடம் உறங்கிக் கிடக்கும் திறமைகள் வெளிப்படும்.
முன்னர் நீங்கள் கற்பனை செய்ததை விட ,மிக வலுவான மிகத் திறமையான நபராக உங்களை நீங்கள் காண்பீர்கள்.
ஆகவே வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும், ஆனால் அதே சமயம் பின்னோக்கியும் பார்க்க வேண்டும்.
எதிரி என்று யாரையும் எண்ணிக் கொள்ளாதீர்கள்.
அவர்களது செயல் உங்களைத் துன்புறுத்தினால் அவர்களுடனான தொடர்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
அவர்களைப் பழி வாங்கவோ, தண்டனை அளிிக்கவோ முயல வேண்டாம்.
மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகிக்காதீர்கள்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
ஒவ்வொருவர் இடமும் குற்றம் பார்த்துக் கொண்டே இருந்தால் உறவுகள் இருக்காது.
கவலையைக் காற்றில் விட்டு மனதை காலியாக வைத்து பாருங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும் வெற்றியும் நிச்சயம் ஆகும்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.
இனிய இரவு வணக்கம்
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி