‘அடக்குமுறை, வன்முறை,பழிவாங்குதல் எதிர்காலம் அல்ல’ - திருத்தந்தை | Veritas Tamil

‘அடக்குமுறை, வன்முறை,பழிவாங்குதல் எதிர்காலம் அல்ல’ - திருத்தந்தை
ஞாயிறு அன்று மூவேளை செபத்தின் போது காசா மக்களுடன் ஒற்றுமை காட்டி உழைக்கும் கத்தோலிக்க சங்கங்களுக்குத் திருத்தந்தை லியோ நன்றி தெரிவித்தார். அதே சமயம், சமாதானத்திற்கான தனது உண்மையான வேண்டுகோளை மறுபடியும் வெளிப்படுத்தினார்.
காசா மக்களுக்குச் சேவை செய்பவர்களுடனும், புனித பூமியில் உள்ள தேவாலயங்களின் தலைவர்களுடனும் தன்னை இணைத்துக் கொண்டு, திருத்தந்தை மீண்டும் வலியுறுத்தினார்:
“வன்முறை, பலவந்த இடம்பெயர்வு, பழிவாங்குதல் ஆகியவை அடிப்படையிலான எதிர்காலம் இல்லை!”
“ஜாதிகளுக்குத் தேவையானது சமாதானமே” என அவர் வலியுறுத்தினார். “அவர்களை உண்மையிலேயே நேசிப்பவர்கள், சமாதானத்திற்காகவே உழைப்பவர்கள்.”
அன்று ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின் உரையாற்றிய திருத்தந்தை லியோ “காசா மக்களுடனான ஒற்றுமைக்காக பணியாற்றும் பல்வேறு கத்தோலிக்க சங்கங்களின் பிரதிநிதிகள்” குறித்து தனது வாழ்த்துகளை முதலில் தெரிவித்தார்.
“அன்பான நண்பர்களே,” எனத் தொடங்கிய திருத்தந்தை, “அந்த வேதனையான நிலத்தில் துன்பப்படும் எங்கள் சகோதர சகோதரிகளுக்குத் தேவாலயம் முழுவதும் காட்டப்படும் உங்களுடைய முனைப்பையும், பல்வேறு முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்,” என்றார்.
காசா நகரில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது
கடந்த சனிக்கிழமை, காசாவில் குறைந்தது 60 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். காசா நகரின் உயரமான கட்டிடங்களை இஸ்ரேல் படைகள் இடித்துக் களைந்து, நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் குண்டுகள் பொருத்தப்பட்ட கட்டமைப்புகளை அழிப்பதில் தீவிரமாக உள்ளன. இந்த புதிய தாக்குதல் கடந்த வாரம் தொடங்கியது.
"ராய்ட்டர்ஸ் செய்தி" இஸ்ரேல் படைகள் நகரின் கிழக்கு புறநகரப் பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. இதன் மூலம் மைய மற்றும் மேற்கு பகுதிகளுக்கு முன்னேறுவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இஸ்ரேல் அரசு, இந்த மாத தொடக்கம் முதல் காசா நகரிலிருந்து சுமார் அரை மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துவிட்டதாகக் கூறுகிறது. ஆனால் காசாவை கட்டுப்படுத்தும் ஹமாஸ், அந்த எண்ணிக்கையை மறுக்கிறது; 3 இலட்சம் பேர் மட்டுமே வெளியேறியுள்ளதாகவும், 9 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் அங்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதில் 50-க்கும் குறைவான இஸ்ரேல் சிறைவாசிகளும் (ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்களால் பிடிக்கப்பட்டவர்கள்) உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலின் காசா ஆக்கிரமிப்பினால் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன், ஹமாஸ் தென் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் – பெரும்பாலும் பொதுமக்கள் – கொல்லப்பட்டனர்; மேலும் சுமார் 250 பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் சிறைவைக்கப்பட்டனர்.
“ஒவ்வொரு மனிதனுக்கும் மீற முடியாத கண்ணியம் உண்டு”
கடந்த வார மூவேளை செபத்திலும், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களிடம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார் திருத்தந்தை. “மீண்டும் மீண்டும் தங்கள் நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, தாங்க முடியாத சூழலில் வாழும் மக்களுக்கு நான் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கிறேன்” என்றார்.
அனைத்தையும் படைத்த இரக்கம் நிறைந்த இறைவனின் “கொலை செய்யாதே" என்ற கட்டளையை சுட்டிக்காட்டி “ஒவ்வொரு மனிதனுக்கும் மீற முடியாத கண்ணியம் உண்டு; அது மதிக்கப்பட வேண்டும், காக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர்
சமாதான ஒப்பந்தம்
கைதிகளின் விடுதலை
பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான சரியான முடிவு
சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முழுமையான மரியாதை
“சமாதானம் மற்றும் நீதியின் விடியல் விரைவில் உதிக்க இறைவன் அருள்புரியட்டும்.” எனக் கூறி சிறு செபத்தில் அனைவரையும் இணைய அழைப்புவிடுத்தார்.
Daily Program
