வேரித்தாஸ் தமிழ்ப்பணியுடன் ,தொன் குவனெல்லா சிறப்புப் பள்ளி குழந்தைகள் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்|veritastamil
வேரித்தாஸ் தமிழ்ப்பணியுடன் ,தொன் குவனெல்லா சிறப்புப் பள்ளி குழந்தைகள் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்
மதம் கடந்து மக்களையும் மண்ணையும் நேசித்த மாமனிதர் நம் போப் பிரான்சிஸ் அவர்களின் திங்கட்கிழமை 21.4 .2025 அன்று காலை அவரின் ஆன்ம இறைவனடி சேர்ந்தது. அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக அஞ்சலி செலுத்த 22.4.2025 காலை 10 மணிக்கு. ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி மற்றும் தொன் குவனெல்லா சிறப்புப் பள்ளி மற்றும் இல்லம் கரையான்சாவடி குழந்தைகள் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் .
சென்னை தமிழ்நாட்டில் இருக்கும் இப்பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகள், அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளியின் இயக்குநர் அருட்தந்தை. ஆனந்தன் .பொருளாளர் தந்தை .கபிரியேல்,உதவி இயக்குநர் அருட்தந்தை. சாலமன் ராஜா அவர்களின் தலைமையில் ரேடியோ வேரித்தாஸ் தமிழ் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை. பிரகாஷ் பிலோமின் ராஜ் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திரு.ஜோசப் , திரு.இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இறை அஞ்சலி வழிபாடு நடத்தப்பட்டன. இவ்வஞ்சலி வழிபாட்டில் செல்ல குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் மெழுகு திரியை ஏற்றி மலர் தூவி திருத்தந்தை அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து வேரித்தாஸ் தமிழ்ப்பணி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை.பிரகாஷ் பிலோமின் ராஜ் அவர்கள் திருத்தந்தையின் எளிமையான வாழ்க்கை அனுபவத்தையும் திருத்தந்தை சிறப்புக்குழந்தைகள் மேல் அவர் வைத்த அன்பை பற்றி அவர்கள் கூறினார்
திருச்சபையை சிறப்பாக நடத்திய சிறந்த தலைவர். தனது தாழ்ச்சியான குணத்தாலும் அன்பான சிரிப்பாலும் அனைவரையும் ஈர்த்த மனிதர். இயற்கையை பாதுகாக்க முனைந்த இறைத்தொண்டர். தம்முடைய வாழ்க்கை முழுவதும் கருணை, நேசம் நீதி , நேர்மை, சமாதானம் என்பவற்றை உணர்த்திய திருத்தந்தை. போப் பிரான்சிஸ் அவர்கள் என அவரைப் பற்றி தொன் குவனெல்லா சிறப்புப் பள்ளி பொருளாளர் தந்தை அருட்தந்தை. கபிரியேல் அவர்கள் கூறினார்.
அதன் பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்
Daily Program
