வாழ்க்கை என்பது வாழ்வதற்கே !! வழிமாறி செல்ல அல்ல!! | எழுத்து  திருமதி கி .அபிராமி | Veritas Tamil

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே !! வழிமாறி செல்ல அல்ல!!

வாழ்க்கையில் ஒவ்வொருவரும்  பல இன்னல்களை கடந்து தான் வாழ்ந்து வருகிறோம் . சில நே ரங்களில் நம்மை யே வெ றுக்கும் அளவிற்கு வாழ்க்கை நம்மை புரட்டிப்போட்டு  விடுகிறது. எப்படியானாலும், வாழ்ந்து தான் ஆக
வேண்டும் அல்லவா!! வாழ்க்கையில் ஒரு சில ஒழுக்க 
நெறிகளை பின்பற்றினால் மட்டும்தான் அமைதியாகவும் சண்டை சச்சரவுகள் இல்லாமலும்
வாழமுடியும். 

அன்றாட வாழ்க்கையில் நாம் பலரை  சந்திக்கிறோம். பழகுவதற்கு இனியர் என்று சிலரை தான் சொல்கிறோம்  ஏன் என்று சிந்தித்து இருக்கிறீர்களா ? காரணம் அவர்கள் பின்பற்றி வந்த ஒழுக்க நெறிகளும் கட்டுப்பாடுகளும் தான். ஒழுக்க நெறி என்றதும் ஏதோ  பெரிய வார்த்தை
என்றெல்லாம் கருத வேண்டாம் அது நாம் செய்யும் சிறு சிறு செயல்களில் கூட கடைப்பிடிக்கலாம்.நாம் எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும்  அதை முழுமையாக மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்து முடிப்பதே
மிகப்பெரிய ஒழுக்கநெறி ஆகும்.

உதாரணமாக, எறும்புகள் செல்வதை கவனித்து
இருக்கிறீர்களா? எப்பொழுதும்  ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமைதியாக இரை இருக்கும் இடத்தை நோக்கி  பயணிக்கும். அது எப்போதும்  அதன் ஒழுங்கமைவை மாற்றியதில்லை . அது போல  நாமும் சில ஒழுக்க
நெறிகளையும் விதிமுறைகளையும் மாற்றாமல் பின்பற்றினால் மட்டுமே வாழ்க்கை அழகாக காட்சியளிக்கும். நாம் ஒழுக்கநெறிகளை பின்பற்றாது மனம் போனப்போக்கில்  வாழும்பொழுது  என்ன நிகழும் என்பதை ஒரு சிறிய கதை மூலம் தெரிந்துக் கொள்ளலாமா ? 

ஒரு நாள் ஒரு எறும்புக்கு ஒரு சிந்தனை  வந்தது
நாமும் கடிக்கிறோம் , பாம்பும் கடிக்கிறது ஆனால் நம்மை பார்த்து யாரும் பயப்படுவதில்லை என்று  அப்போது  சக எறும்பு நண்பர்கள் பாம்பு கடித்தால் விஷம் ஏறும் நாம் கடித்தால் விஷம் ஏறாது என்று கூறினர் பின்னர் எறும்பு இறைவனிடம் சென்று முறையிட்டது இறைவன்,எறும்புகளிடம் அவரவர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் தான் பயணிக்க வேண்டும். 
ஒருபோதும்  மற்றவரை பார்த்து மாறிக்கொண்டே இருக்கக்கூடாது. "எறும்பே நீ எறும்பாய் இரு,பாம்பு பாம்பாய் இருக்கட்டும்" என்று கூறினார். 

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள  வேண்டியது என்னவென்றால் வாழ்க்கை தரும் சவால்களையும் இன்னல்களையும் ஒழுக்கநெறியில் இருந்து விலகாமல் எதிர்கொண்டால்  வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.

எழுத்து 
கி .அபிராமி 

Daily Program

Livesteam thumbnail