இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார் சீசர்

பண்டைய கிரேக்கத்திற்கு இணையாக விளங்கியது ரோம். நாகரிகம், இலக்கியம், கலை, ஓவியத்திற்கு புகழ்பெற்றது ரோம் கட்டடக்கலை, சிற்பக்கலையின் பிறப்பிடம் இது. உலக நாகரிகத்திற்கு ரோமின் நன்கொடை மிக மிக அதிகம்.

ரோம் வரலாற்றில் அறியப்படவேண்டிய ஒரு முக்கியமான பெயர் ஜூலியஸ் சீசர் இவரது காலம் கி.மு 102-44. சிறந்த வீரர், தளபதி, பேச்சுக்கலையில் சிறந்த வர், மக்களின் உரிமையை ஆதரித்தவர். மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். வெற்றியாளர் எனப் பல்வேறு புகழத்தக்க இயல்புமிக்கவர்.

இவர் ரோமில் கி.மு 60இல் சிரான்ஸஸ், பாம்ப்பி போன்றவருடன் சேர்ந்து ஒரு கூட்டாட்சியை ஏற்படுத்தி னார். பிரான்ஸ் நாட்டின்மீது படையெடுத்து, அதனை வென்று ரோமானியப் பேரரசுடன் இணைத்தார். கி.மு 55-54இல் இங்கிலாந்து மீது படையெடுத்து, அதனை யும் வென்றார். மிகப் பெரிய வீரர், வெற்றியாளர் சீசர் என நாடு முழுதும் இவர் பெயரும் புகழும் பரவியது. He came, He saw, He conquired என்று கூறும் அளவிற்கு பெரிய வெற்றிவீரர் எனலாம்.

இப்படி சீசரின் பெரும்புகழ் ரோம் எங்கும் பரவியது கண்டு, அவரது நண்பர்களிடம், அது மிகப்பெரிய பொறாமை உணர்வை விதைத்தது, வளர்த்தது. இவரைக் கொலை செய்ய ரகசியமாக திட்டம் தீட்டுகிற அளவிற்கு அப்பகை சென்றது. ஒரு உள்நாட்டுப் போர் சீசருக்கு எதிராக பாம்ப்பியால் நடத்தப்பட்டது. கொலை முயற்சி தடுக்கப்பட்டது. உள்ளாட்டுப் போரிலும் சீசரே வென்றார். பாம்ப்பி தோல்வியுற்று எகிப்து நாட்டிற்கு தப்பி ஓடினார்.

இவ்வெற்றிக்குப்பின் சீசரின் புகழ் மேலும் பரவியது. மக்களிடம் செல்வாக்கு உயர்ந்தது. மக்களே இவரை சர்வாதிகாரி ஆக்கிடக் கோரும் அளவிற்கு, மக்களிடம் நம்பிக்கை மிகுந்தவராக சீசர் வளர்ந்தார்.

ஆனால் சீசர் இதனை ஏற்கவில்லை. சர்வாதிகாரி ஆகும் விருப்பம் இவருக்கு இல்லை. ரோம் நாட்டை உலக அளவில் உயர்த்திட வேண்டும். நாட்டில் மிக நல்ல ஆட்சி ஒன்றைத் தர வேண்டும் என்பதே சீசரின் முக்கிய குறிக்கோளாய் இருந்தது.

‘அரசர்' என்ற நிலையினை சீசர் வலுப்படுத்திக் கொண்டு, ரோம் சாம்ராஜ்யத்தின் 'பேரரசர்' எனத் திகழ்ந்தார். நாட்டில் பல சீர்திருத்தங்களை செய்தார். அரசுப்பணியில் செல்வாக்கை ஒழித்தார். திறமையும், நேர்மையும் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசுப்பணி தரப்பட்டது. இது நல்ல நிர்வாகச் சீர்திருத்தமாக அமைந்தது. நிதி, வணிகம், கட்டடம், கலை என சகலத்துறையிலும் இவர் காலத்தில் ரோம் புகழ்பெற்றது.

முதல் சதியில் சீசர் வென்றாலும், இரண்டாம் சதியை இவரால் அறியவும் தடுக்கவும் முடியாமல் போய் விட்டது. நண்பர்களே கொலை முயற்சியில் ஈடுபட்ட தாலும், சதி செனட் சபையிலேயே திட்டமிட்டடு நிறைவேற்றப்பட்டதாலும் சீசர் கி.மு. 44இல் மார்ச் 15ஆம் நாள் கொலை செய்யப்பட்டார்.

சீசரின் வாழ்க்கையை ' ஜூலியஸ் சீசர்' என்று புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் ஷேக்ஸ்பியர் மிகச் சிறந்த நாடகமாக்கினார். இது ஷேக்ஸ்பியருக்கும், சீசருக்கும் பெருமையைச் சேர்த்தது.

சீசரின் மிக நெருக்கமான நண்பர் புரூட்டஸ் கூடா இந்த சதியில் ஈடுபட்டது துயரம். சீசர் நாடகத்தில், புரூட்டஸ் சீசரைக் கத்தியால் குத்தும்போது You too Brutus! என்று கேட்பதாக வரும் வசனம் நம் மனதைத் தொடும். ரோம் செனட்டில் வரிசையாய் பலரும் கத்தியால் குத்திட - இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார் சீசர்.

சீசர் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவர். வீரமும் தீரமும் அஞ்சாநெஞ்சமும் உள்ளவர். எதையும் எளிதில் முடிவெடுக்கும் ஆற்றல் பெற்றவர். ரோம் ராணுவத்தில் பணி செய்தவர். ஆசியாவில் உள்ள அப்போதைய ரோமானிய ராணுவத்தில் அவர் பணி செய்தார். இக் காலத்தில், இவரது வீரத்திற்காக Civic Crown என்ற உயரிய ராணுவ விருதையும் பெற்றவர். பிறகே ரோம் திரும்பினார். ரோம் திரும்பிய பின் ரோமானிய அரசியலில் ஈடுபட்டார். பிரான்ஸ், இங்கிலாந்து என்ற இரு செல்வாக்கும், படைபலமும் மிக்க நாட்டை மட்டுமல்லாது, சிரியா, எகிப்து மீதும் படையெடுத்தார்.

இவரது ரோமானியப் பேரரசு, கிரேக்க நாட்டு அலெக்ஸாண்டரின் சாம்ராஜ்ஜியத்தைவிட பெரிதாக இருந்தது. ஆங்கில மாதத்தில் வரும் ஜூலை என்கிற மாதம் இவரின் பெயரின் நினைவாக அமைக்கப் பட்டதே.