நம்மோடு இருப்பவர்

என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்.

திருப்பாடல்கள் 89-20.21

நான் உன்னை கண்டு பிடித்தேன். உன்னை அபிசேகம் பண்ணினேன். என் ஓங்கிய புயமும் வலிய கரமும் உன்னோடு இருக்கும். நீ பயபடாதே. என் உண்மையும் என் அருளும் உன்னோடு இருக்கும் என்று தாவீது ராஜாவிடம் ஆண்டவர் சொன்னார் . சொன்னபடி செய்தார்.

அதே ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் கண்டு பிடித்திருக்கிறார். அவருடைய கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை. பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிற அவருடைய கண்கள், நம் ஏழ்மையில், நோயில், தனிமையில், வெறுப்பில் , வேதனையில் , நம்மை தேடி கண்டு கொண்டது. . 

தாவீதின் வாழ்நாளெல்லாம் போராட்டம் இருந்த போதும் ஆண்டவர் அவரோடு இருந்தார். இன்றும் நம்மோடு இருக்கிறார். 

நம் வேதனைகளுக்கும் , நோய்க்கும், வறுமைக்கும், தனிமைக்கும் ஒரு முடிவு வரும். ஆண்டவரை நோக்கி பார்ப்போம். ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம்.

 

ஆண்டவரே, உம் பாதத்தில் என்னை ஒப்பு கொடுத்தேன். என்னை தேடி வந்த கடவுளே, உம் அன்புக்கு நன்றி. உம் பாதுகாப்புக்கு நன்றி. உம் இரக்கம் மகா பெரியது. உம் அருளால் என்னை நிரப்பும். என் ஏழ்மையில், நோயில், துன்பத்தில், தனிமையில் உம் அன்பை சுவைக்க அருள் தாரும். ஆசீர்வதியும். ஆமென்