நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் | International Day of Action for Rivers

நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம்
        மார்ச் 1997 இல் குரிடிபா பிரேசிலில் அணைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதல் சர்வதேச கூட்டம் நடைபெற்றது. அதில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் மார்ச் 14 அன்று நடைபெறும் என்று முடிவு செய்தனர். இந்த சர்வதேச நதிகளுக்கான நடவடிக்கை தினத்தின் நோக்கம், அழிவுகரமான நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராக ஒருமித்த குரலை எழுப்புவதும், நமது நீர்நிலைகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதும், நமது நதிகளின் சமமான மற்றும் நிலையான நிர்வாகத்தைக் கோருவதும் ஆகும். 
        இன்று நாம் கொண்டாடும் வேளையில் நதிகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும், ஆறுகளின் முக்கியத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உலக அளவில் நதி மேலாண்மை, நதி மாசுபாடு, நதிப் பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றி விவாதிக்க எல்லைகளைத் தாண்டி மக்களைக் கூட்டிச்செல்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட நதிகளை சுத்தம் செய்தல், ஆன்லைன் வெபினர்கள், நதி நடைகள் மற்றும் துடுப்பு பலகை கொண்டாட்டங்கள் என அனைத்தும் முறையிலும் விழிப்புணர்வும் உரிமைக் குரல் கொடுக்கப்படுகின்றன. இது பங்களாதேஷிலிருந்து குவாம் வரை, ஜெர்மனியிலிருந்து நைஜீரியா வரை உண்மை. இதற்கு சூசுiஎநசளருnவைநருள என்ற சூ பயன்படுத்துகிறார்கள்.