உலக நலவாழ்வு நாள் | April 7


        1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வொரு ஆண்டும் உலக நலவாழ்வு நாள் கொண்டாடப்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.
        உலக நலவாழ்வு நிறுவனம் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது. உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளைச் செய்யும் அதிகாரம் கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. இதன் முக்கிய வேலை திட்டம் தொற்றுநோய்கள் போன்ற நோய் நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.

Add new comment

9 + 11 =