குடும்பங்கள், நாடுகள், திருஅவைச் சமூகம் மற்றும் சமுதாயத்திற்கிடையே ஓர் உறவு பலமாக விளங்குகிறீர்கள் என்றும், எல்லோருக்கும் உங்கள் இதயங்களின் கதவுகளைத் திறந்து வைத்திருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து கடவுளின் அன்பைப் பகிரவே மனிதனானார். தம்மை முழுவதுமாகக் கையளித்த இறைமகனின் பிறப்புக்காகத் தயாரிக்கும் நாம் பிறருடைய தேவையை உணர்ந்து தாராள மனதுடன் இருப்பதைப் பகிர்பவர்களாக வாழவேண்டும்.
ஒன்றாகக் கனவு காணுங்கள், அனைவராலும் உருவாக்கப்பட்ட சமூகத்தில் சகமனிதர்களாகப் புதிய கனவு காணும் அனைவரரையும் மனித மாண்புடன் நடத்துங்கள் என்றும், என் வாழ்வைப் பிரதிபலிக்கும் பலரைக் கண்டு நான் பெரிதும் மகிழ்வடைகின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் சார்பு, தேசியம் அல்லது சமுதாயம், உடைமைகள், பிறப்பு என எந்த ஒரு அடிப்படையிலும் மனிதர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது.
பகைமையால் சிறைவைக்கப்பட்டு, மோதல்களுக்கு காரணமாக இருக்கும் இதயங்களின் மனமாறலுக்கு அமைதியின் அரசியாம் அன்னை மரியா உதவவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.