நாளும் சேவை நலமான வாழ்க்கை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
நாளும் சேவை நலமான வாழ்க்கை
வாழும்போது எப்படியெல்லாம் வாழ்ந்தோம் என்பதைவிட, எத்தனை பேருக்கு உதவினோம் என்பதில்தான் அதன் சிறப்பு அடங்கியுள்ளது.
மாத வருமானத்தில் அவரவர் குடும்பத்தைச் சமாளிப்பதே சவால் நிறைந்ததாக அமைகின்றது. இப்படி இருக்க மாத வருமானத்தில் 25 சதவீதம் வருமானத்தை ஏழைகளுக்காக உதவிடும் ஆறுமுகம், மனிதநேய மனிதராக நம்முன் காட்சியளிக்கின்றார்.
மதுரை பரசுராம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஒரு வேளாண் அலுவலர். தமது மாத வருமானத்தில் 25 சதவீதத்தை முகம் தெரியாத நபர்களுக்காக ஒதுக்கி வைக்கிறார். நானூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் இவரால் பயன் அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களைத் தேடிச் சென்று உதவுகிறார். ஒவ்வோராண்டும் பத்து ஏழைக் குழந்தைகளின் மேற்படிப்புக்கான செலவை ஏற்றுக்கொள்கிறார்.
கல்விச் சேவையில் மட்டும் தமது பணியைச் சுருக்கிக்கொள்ளாமல், விடுமுறை நாள்களில் முதியோர் இல்லம் சென்று அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்கிறார். குறிப்பாக ஊனமுற்ற முதியோருக்குத் தேவையான கருவிகளை இலவசமாகவே வழங்குகிறார்.
இவரின் சமூகப் பணியைப் பாராட்டி இவர் பெற்ற விருதுகள் நாற்பதுக்கும் மேற்பட்டவையாகும். “எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம். என்பதைவிட, எத்தனை பேர் பயன் பெற வாழ்கிறோம் என்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைப்பதில்லை” என்பது ஆறுமுகத்தின் வாழ்வியல் சிந்தனைகளாக இருக்கின்றது.
படிக்க முடி சிறுவயதில் தந்தையை இழந்த இவரால் ஏழாம் வகுப்புக்குமேல் இரண்டு முடியவில்லை. குடும்பமும் மிகவும் வறுமையான குடும்பம். ண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது ஊரில் இருந்த ஒரு சைக்கிள் கடைக்காரர்தான் தன்னைப் படிக்க வைத்தார் என்று நன்றி பெருக்கோடு கூறும் ஆறுமுகம், தன்னைப்போல யாரும் சிறுவயதில் படிக்கப் பணம் இல்லாமல் படிப்பை திட்டமாக இருக்கிறது. பை இடையில் நிறுத்தக் கூடாது என்பது இவரின்
எளியவர்மேல் இரக்கம், இயலாதவர்மீது பரிவு இவை இரண்டும் நமது கண்களாக இருக்கட்டும்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
