குழித்துறையில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட புத்தகத் திருவிழா | Veritas tamil

குழித்துறை மறைமாவட்டம், வேங்கோடு மறைவட்ட இளைஞர் இயக்கம் மற்றும் இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் இணைந்து முன்னெடுத்த “நம்ம ஊர் புத்தக திருவிழா 2026" ஜனவரி 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 11.00 மணி முதல் மாலை 6:30 மணி வரை புதுக்கடை, முன்சிறை புனித ஆரோக்கிய மாதா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.புத்தக வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தல், இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்தல் மற்றும் தமிழ்பண்பாட்டை முன்னிறுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தக கண்காட்சியை அசிசி பதிப்பகத்தின் பொறுப்பாளர் அருள்பணி.அனில் ஜோசப் அவர்கள் வண்ணநாடா வெட்டி திறந்து வைத்தார். புத்தகத் திருவிழாவில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல்வேறு பங்குகளில் இருந்தும் சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

புத்தக திருவிழாவில் பாரதி பதிப்பகம், குமரி புத்தக பதிப்பகம், நியூ செஞ்சுரி ஹவுஸ், மணலி பப்ளிஷிங் ஹவுஸ், அசிசி பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் இடம் பெற்றிருந்தது.

இந்த புத்தகத் திருவிழா இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.

முதல் அமர்வானது காலை 11:00 மணியளவில் தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த அமர்வின் தொடக்க நிகழ்வு சுமார் 11:15 மணியளவில் தொடக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வேங்கோடு மறைவட்ட இளைஞர் இயக்க தலைவர் தோழர்.ஆஷிக் பிரிட்டோ அவர்கள் தலைமை தாங்கினார். வேங்கோடு மறைவட்ட இளைஞர் இயக்க மற்றும் இளம் கிறிஸ்தவ மாணவ இயக்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒளியேற்றுதலுடன் முதல் அமர்வு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இளைஞர் இயக்கம் மற்றும் இளம் கிறிஸ்தவ மாணவியருக்கு செயற்குழு நிர்வாகிகள் இணைந்து இறைவணக்க பாடல் பாடினர். திருவிவிலியம் வாசிக்கப்பட்டது. வேங்கோடு மறைவட்ட இளைஞர் இயக்குனர் அருள்பணி. அமல்ராஜ் அறிமுக உரையாற்றினார்.அதைத்தொடர்ந்து இளைஞர் இயக்க இணை இயக்குனர் டாக்டர். ஸ்டான்லி தாமஸ் அவர்கள் தொடக்க உரையாற்றினார்கள். வேங்கோடு மறைவட்ட இளம் கிறிஸ்தவ மாணவ இயக்க இணை இயக்குனர் திரு.ஜோஸ் பிரகாஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். குழித்துறை மறைமாவட்ட துணைச் செயலாளர் தோழர். லாவண்யா அவர்கள் புத்தகம் ஏன் நாம் படிக்க வேண்டும் புத்தகம் படிப்பதால் நம் வாழ்வு மேன்மைப்படும் மேலும் அவர் படித்த புத்தகத்தின் அனுபவங்களை நமக்கு சிறப்புரையாக வழங்கினார்.

அடுத்ததாக குழித்துறை மறைமாவட்ட மாத இதழான யுகசக்தியின் ஆசிரியர் திரு.ரெஞ்சித் அவர்கள் புத்தகம் படிப்பதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி விரிவாக சிறப்புரை ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அசிசி பதிப்பகத்தின் பொறுப்பாளர் அருள்பணி.அனில் ஜோசப் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். குழித்துறை மறைமாவட்ட இளைஞர் இயக்க தலைவர் தோழர். அபிஜோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். குழித்துறை மறைமாவட்ட இளைஞர் இயக்க இயக்குனர் அருள்பணி. ஆல்பின் ஜோஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதன் பின்னர் எழுத்தாளர் குமரி தோழன் அவர்கள் புத்தகத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் சிறப்பாக கருத்துரை ஆற்றினார்கள். அதன் பின்னர் வளனூர் இளைஞர் இயக்க மற்றும் இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்க வழிகாட்டி திருமதி. சலீனா பிராங்கிளின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அருள்பணி.ஜெய பிரகாஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். குழித்துறை மறைமாவட்ட யுகசக்தி ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர். அனீஷ் மற்றும் மாத்திரவிளை வட்டார களப்பணியாளர் திருமதி. லிசி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கருத்தாளர் , சிறப்புரையாற்றியவர்கள் வாழ்த்துரை வழங்கிய அனைவருக்கும் வேங்கோடு மறைவட்ட இளைஞர் இயக்கம் மற்றும் இளம் கிறிஸ்தவ மாணவ இயக்கம் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மதியம் சுமார் 12:35 மணி அளவில் முதல் அமர்வு நிறைவடைந்தது.

மதியம் சுமார் 2 மணி அளவில் இரண்டாம் அமர்வு தொடங்கியது. வேங்கோடு வட்டார முதன்மை அருள்பணியாளர் அருள்தந்தை மனோக்கியம் சேவியர் அவர்கள் இரண்டாம் அமர்வின் போது சிறப்பு விருந்தினராக புத்தக கண்காட்சியை பார்வையிட்டார்

வேங்கோடு மறைவட்ட இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் சார்பாக புத்தக விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொங்கல் கண்காட்சி போட்டிகள் நடத்தப்பட்டன. பொங்கல் கண்காட்சி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பங்குகளும் சிறப்பாக பங்கேற்று சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக புத்தகம் சார்ந்த வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன் பின்னர் புத்தக மதிப்பாய்வு செய்யப்பட்டது. "உங்கள் குழந்தைகளை படியுங்கள்" என்ற புத்தகத்தை பற்றி அழகாக ஊற்றுக்குழி பெற்றோர் ஒருவர் நூல் விமர்சனம் செய்தார். "உலகை உலுக்கிய 40 சிறுவர்கள் " இந்த புத்தகத்தைப் பற்றி முஞ்சிறை இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கத்தினர் சிறப்பாக புத்தகத் திறனாய்வு செய்தனர்."குண்டக்க மண்டக்க அறிவியல்" என்ற புத்தகத்தை பற்றி அன்னை நகர் இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்க நிர்வாகி சிறப்பாக புத்தகத்திறனாய்வு செய்தார்.

புத்தக திருவிழாவின் முக்கிய அம்சமாக பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை, சமூக சிந்தனை, வரலாறு உள்ளிட்ட பல்வேறு வகை நூல்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. பங்கேற்பாளர்கள் புத்தகங்களை பார்வையிட்டு வாசித்து, தங்களுக்குப் பிடித்த நூல்களை வாங்கும் வாய்ப்பு பெற்றனர்.

வாசிப்பு – சமூக மாற்றத்தின் விதை இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்த்தல், படைப்பாற்றலை ஊக்குவித்தல் மற்றும் அறிவுசார் சமூகத்தை உருவாக்க இந்த புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் புத்தகங்களுடன் ஒரு புதிய சிந்தனையையும், புதிய கனவையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.

நிகழ்வின் நிறைவாக, சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு பாராட்டுகள் வழங்கப்பட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் அனைவருக்கும் இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்க நிர்வாகிகள் நன்றியுரை கூறினார்கள்.“படிப்போம் – பயன்பெறுவோம் – மாற்றத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கத்தோடு இந்த புத்தகத் திருவிழா இனிதே நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புத்தக வாசிப்பின் மகத்துவத்தை அனுபவித்தனர்.