அன்பு ஒரு அழகியல் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.05.2024
அன்பு ஒரு அழகியல் ...!
வெறுப்பில் அளவு முறை இருக்கிறது.
ஆனால் அன்பில் அப்படி இல்லை.
அதேபோல் கோவத்தில் அளவு முறை இருக்கிறது.
ஆனால் மன்னித்தலில் எந்த அளவும் கிடையாது.
பாவத்தில் அளவு உண்டு.
புண்ணியத்தில் அளவு இல்லை.
அப்படி இருக்கவும் முடியாது.
ஏனெனில்!
மனிதன் பிறவி எடுத்து வந்ததே அன்பாக இருப்பதற்கும்,
பிறர் குற்றத்தை மன்னிப்பதற்கும்,
புண்ணியம் செய்வதற்கும் தானே தவிர வேறு எதற்கும் இல்லை
நல்லது கேட்டது என்பது மனதின் வேறுபாடு.
எது நல்லது எது கேட்டது என்று தீர்மானிக்க எந்த வழியும் இல்லை.
இந்த உலகத்தில் மனித இயல்பே இல்லாவிட்டால்,
நல்லது அல்லது கெட்டது என்று ஏதும் இருக்குமா?
இருக்கவே இருக்காது.
ஏனெனில்!
அவற்றை ஏற்படுத்தியது மனிதனின் மனம் தான்.
இந்த உலகத்தில் மனித குலம் இல்லாவிட்டால்
அருவருப்பான மலர் என்றும்,
அழகான மலர் என்றும் எதுவும் உண்டா?
அங்கு வெறும் மலர்கள் மலர்தல் மட்டுமே இருக்க முடியும்
பாகுபாடு பார்ப்பது மனித மனம் மட்டுமே
மனதின் மாட்சியில்
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி