தொடரட்டும் பயணம்...! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.03.2024

                                                                                                   தொடரட்டும் பயணம்...!

நடந்து கொண்டே இருங்கள்

இலக்கை நோக்கி.

வழியில் பல பேர் 
இணைவார்கள்

சில பேர் பிரிவார்கள்.

சிலர் உங்களை திசை 
திருப்ப பார்ப்பார்கள்.

சிலர் உங்களை அவமதித்து  பலகீனப்படுத்துவார்கள்.

சிலர் உங்களை எள்ளி
நகையாடுவார்கள்.

உங்கள் வாழ்க்கை எனும் 
நாடகத்தில் அவர்கள் எல்லாம் 
சில உதிரி கதாபாத்திரங்கள்.

அவர்கள் பங்களிப்பு முடிந்தவுடன் 
மேடையை விட்டு இறங்கிவிடுவார்கள்.

ஆனால் நாடகம் மட்டும் 
நிற்காமல் தொடரும்.

இந்த சலசலப்புக்கெல்லாம்
அஞ்சாதீர்கள்.

உங்களுக்கு துணையாக
இறைவனும் கூடவே வருவார்.

நடந்து கொண்டே இருங்கள்.

உங்கள் இலக்கை நோக்கி.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி