வாழ்க்கை ஒரு வாய்ப்பு வசப்படுத்து | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.03.2024

வாழ்க்கை ஒரு
வாய்ப்பு 
வசப்படுத்து. 

அழகு
அதிசயத்துப்பார். 

சவால் சந்தித்துவிடு. 

சோதனை மீண்டு எழு. 

தீரச்செயல் துணிந்து செய். 

துயரம் தோற்க்கடி. 

பாடம் படித்துவிடு.

 பாடல் பாடிப்பார். 

பணி முடித்துவிடு. 

கனவு உணர்ந்திடு. 

போராட்டம் போர்தொடு. 

சத்தியம் நிறைவேற்று. 

வரம் வாழ்ந்துவிடு.
 
மழைத்துளிகளை பிடித்து
மாலையாய் கட்ட முடியும்.

கடலின் அலைகளிடம் 
கடிதம் எழுத சொல்ல முடியும்.

நட்சத்திரங்களை எண்ணி
நாளைக்கு சேர்க்க முடியும்.

நிலவின் வெளிச்சத்தில்
நின்றே வாழ முடியும். 

ஆகாயத்தை அன்பால்
அடிபணிய செய்ய முடியும். 

நம்பிக்கை நதி மட்டும் 
நம்மில் வற்றாமல் இருந்தால்.

உலகமும் தோழா
உன் வசப்படுமடா!

நேற்று என்பது
தொலைந்து போனது! 

நாளை என்பது
தொலைவில் உள்ளது! 

இன்று மட்டும்
தொலையாது கையில் உள்ளது! 

எட்டு வைத்து செல்,
நீ எட்டு திசையும் வெல்!!!

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க நம்பிக்கையுடன் 

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி