அருள்பணியாளர்கள் பயிற்சி உருவாக்கத்தில் பொதுநிலையினரின் பங்கேற்பு தேவை என வலியுறுத்துகிறார் . !| Veritas Tamil
மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் வலியுறுத்தல்!
அருள்பணியாளர்கள் பயிற்சி உருவாக்கத்தில் பொதுநிலையினரின் பங்கேற்பு தேவை என வலியுறுத்துகிறார் .
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள
ஆல்பா மேய்ப்புப்பணி மையத்தில், அருள்பணியாளர் உயர்பயிற்சியகத்தின் (Major Seminary) தலைவர்களின் 24-வது ஆண்டுக் கூட்டம் நவம்பர் 4, 2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப், அருள்பணியாளர் பயிற்சி உருவாக்கத்தில் அதிக அளவில் பொதுநிலையினர் ஈடுபாட்டை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நீதிபதி குரியன் ஜோசப், பொதுநிலையினரின் பங்கேற்பு அருள்பணியாளரின் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தும் எனக் கூறிய அவர், திரு அவைக்கு நேய மதிப்பீடுகள், உணர்வு சமநிலை மற்றும் மாறிவரும் உலகின் யதார்த்தங்களைப்
புரிந்துகொள்ளும் திறன் கொண்ட அருள்பணியாளர் தேவை' எனவும் அறிவுறுத்தினார்.
இந்திய ஆயர் பேரவையின் இறையழைத்தல், அருள்பணியாளர் பயிற்சியகம், அகுள்பணியாளர் மற்றும் துறவியர் ஆணையத்தின் தலைவரும் மற்றும் கோழிக்கோடு உயர்மறைமாவட்டப் பேராயருமான மேதகு வர்கீஸ் சக்கலக்கல், "எதிர்கால அருள்பணியாளர் உருவாக்கத்தில் உளவியல் நுண்ணறிவு மற்றும் ஆழமான ஆன்மிக அடித்தளத்தை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்."
சிறப்புரை வழங்கிய ஆலப்புழா மறைமாவட்ட ஆயர் மேதகு ஜேம்ஸ் ஆனபரம்பில், "அருள்பணியாளர் உயர்பயிற்சியக உருவாக்கத்தில் அதிகப் பொதுநிலையினரை ஈடுபடுத்துவது புதிய கண்ணோட்டங்களைக் கொண்டுவரும். என்றும், மேலும் எதிர்கால அருள்பணியாளர் தாங்கள் பணிபுரியும் சமூகங்களுடன் நெருக்கமாக இணைவதற்கு உதவும்" என்றும் கூறினார்.
இக்கூட்டத்தில் இந்திய ஆயர் பேரவையின் இறையழைத்தல் ஆணையத்தின் செயலர் அருள்முனைவர் சார்லஸ் லியோன், துணைப் பொதுச் செயலாளர் அருள்முனைவர் ஸ்டீபன் அலத்தாரா உட்பட பல்வேறு அருள்பணியாளர் உயர்பயிற்சியகத்தின் தலைவர்கள் பங்கேற்றனர்.