இந்தோனேசியாவில் திருத்தந்தை பிரான்சிஸ்
இந்தோனேசியாவின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 3, 2024 செவ்வாய் அன்று போப் பிரான்சிஸ் இந்தோனேசியாவை வந்தடைந்தார். காலை 11:30 மணியளவில் தங்கராங்கில் உள்ள சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போப்,இந்தோனேசிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகளால் வரவேற்கப்பட்டார்.
"இந்தோனேசியாவின் மக்கள் சார்பாக, புனித போப் பிரான்சிஸை நம் நாட்டிற்கு வரவேற்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று ஜனாதிபதி ஜோகோவி கூறினார். "இந்தோனேசியாவும் வாடிகனும் அமைதி, சகோதரத்துவம் மற்றும் அனைத்து மக்களின் நல்வாழ்வையும் வளர்ப்பதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. திருத்தந்தையின் இந்த நான்கு நாள் பயணமானது நமது தேசத்தில் மதங்களுக்கு இடையேயான உரையாடலை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தோனேசியாவின் தேசிய முழக்கமான பின்னேகா துங்கல் இக்கா (வேற்றுமையில் ஒற்றுமை) என்பதை உணர்த்தும் வகையில், பாரம்பரிய மலுகு உடை அணிந்த இரண்டு இளம் குழந்தைகள் அவருக்கு மலர்களை வழங்கி அன்பான வரவேற்பு தொடர்ந்தது.
போப் பிரான்சிஸின் அடக்கம் அனைத்துத் தலைவர்களும் விரும்ப வேண்டிய பண்பு என்று அமைச்சர் Yaqut Cholil Quomas கூறியுள்ளார்."எளிமையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைகிறார். எளிமையான போக்குவரத்து முறையை அவர் விரும்புவது நாம் அனைவரும் பாராட்டவும் பின்பற்றவும் வேண்டிய ஒன்று என்றும் உரைத்துள்ளார்.
போப் பிரான்சிஸின் இந்தோனேஷியா பயணம், நாட்டில் உள்ள பல்வேறு மத சமூகங்களிடையே அதிக புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஒரு முக்கிய தருணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன்கிழமையின், அதாவது, செப்டம்பர் 4ஆம் தேதியின் பயணத்திட்டத்தை காலை தனியாக திருப்பலி நிறைவேற்றுவதுடன் துவக்க உள்ளார். அதன் பின் திருப்பீடத்தூதரகத்திலிருந்து 2.9 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குச் செல்வார். தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள மெர்டெகா வளாகத்தின் வடபகுதியில் அமைந்திருக்கும் அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தைக்கான வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. அதன்பின் அரசுத்தலைவர் Joko Widodo அவர்களை அரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்து உரையாடுவார் திருத்தந்தை.
அதன்பின் அரசுத்தலைவர் மாளிகையில் உள்ள Istana Negara என்ற அரங்கிற்கு நடந்து சென்று, அங்கு அரசியல் தலைவர்கள், இந்தோனேசியாவிற்கான பல்வேறு நாடுகளின் அரசுத்தூதுவர்கள் ஆகியோரை சந்தித்து உரை வழங்குவார். இதுவே இந்தோனேசியா நாட்டில் அவர் வழங்க உள்ள முதல் உரையாகும்.இவ்வுரையை முடித்தபின் அங்கிருந்து 2.9 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத்தூதரகம் சென்று, இந்தோனேசியாவில் பணியாற்றும் இயேசு சபையினரை சந்தித்து அவர்களோடு சிறிது நேரம் உரையாடுவார்.
அதன்பின் விண்ணேற்பு நமதன்னை பேராலயத்திற்குச்சென்று அங்கு ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், குருமடமாணவர்கள், பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்து உரை ஒன்றும் வழங்குவார் மற்றும் பேராலயத்திற்கு மிக அருகாமையில் உள்ள இளையோர் இல்லமான Grha Pemuda சென்று அங்கு Scholas Occurrentes அமைப்பின் அங்கத்தினர்களை, அதாவது இளையோரை சந்தித்து அவர்களோடு உரையாடி மகிழ்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 5 ஆம் தேதி கெலோரா பங் கர்னோ ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்களுடன் திருப்பலி நிறைவேற்றுவர், அதன்பின் போப் பிரான்சிஸ் ஜனாதிபதி ஜோகோ விடோடோ மற்றும் மதத் தலைவர்களையும் இஸ்திக்லால் மசூதியில் சந்திக்க உள்ளார். தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதிக்கான இந்த சந்திப்பு , மத பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற நாடான இந்தோனேசியாவில் மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் போப்பின் உறுதிப்பாட்டை மேற்கோள்கட்டுகிறது காட்டுகிறது.