இயற்கையின் தொடக்கம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 11.11.2024
மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.
ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும், வேப்பமரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல,
நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.
ஒரே நீரைத் தான் அருந்துகிறோம்
ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம்.
ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ, அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும்.
நீ நல்லவன் என்பதால் உன்னை யாரும் ஏமாற்ற மாட்டார்கள் என எதிர்பார்ப்பது,
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாது என நம்புவதற்குச் சமம்.
வாழ்க்கையில் நம்மை சோதிப்பதற்காக பல மனிதர்களும்
பல சிக்கலான சூழ்நிலைகளும் பல சந்தர்ப்பங்களும் உண்டு.
ஆகையால் நல்லது எதோ அதை மட்டும் எடுத்து கொண்டால் வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் உழைப்பும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி