இன்பமும் துன்பமும் கிறிஸ்தவ வாழ்வுக்குரியன! | ஆர்.கே.சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 24ம்.வாரம்-செவ்வாய்
15 செப்டம்பர் 2026
புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) 
1 கொரி 12: 12-14, 27-31a
யோவான் 19: 25-27
 
இன்பமும் துன்பமும் கிறிஸ்தவ வாழ்வுக்குரியன!

முதல் வாசகம்.

இவ்வாசகப் பகுதி திருஅவை கிறிஸ்துவின் திருவுடல் என்றும் நம்பிக்கையாளர்கள் அல்லது திருமுழுக்குப் பெற்றவர்கள் யாவரும்  அதன் வெவ்வேறு உறுப்புகள் என்பதை புனித பவுல் 
அடிகள் எடுத்துரைக்கிறார்.

•    ஒரே உடலில் பல உறுப்புகள் இருப்பதுபோல், திருஅவையிலும் பலவிதமான வரங்களும் பொறுப்புகளும் உள்ளன என்பதை உடல்-உறுப்புகளோடு ஒப்பிட்டுப் போதிக்கிறா்.

நாம் பலராக இருந்தாலும், ஒரே ஆவியினால் ஒரே உடலாக இணைக்கப்பட்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பணிகளும் ஆவிக்குரிய வரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன; எந்த உறுப்பும் மற்றொன்றைவிட முக்கியமானதாகக் கருதப்படலாகாது.

•    திருத்தூதுப்பணி, இறைவாக்குரைத்தல்,போதித்தல்  போன்ற பல்வேறு பணிகள் கடவுளின் திருஅவையில்  உள்ளன. ஆகவே, கடவுள் கொடுத்த வரத்தைப் பயன்படுத்தி திருஅவையின் வளர்ச்சிக்கும் பிறருடைய நன்மைக்கும் சேவை செய்ய வேண்டும் என்றும்   “மேன்மையான வரங்களை நாடுங்கள்” என்றும் பவுல் அறிவுறுத்துகிறார்.


நற்செய்தி.

நற்செய்தியல், இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்தபோது, அவருடைய தாயாகிய மரியாவும், அவரது அன்பு சீடர் யோவானும்  அருகில் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயைக் கண்டு, அந்தச் சீடரை நோக்கி, “இதோ, உன் தாய்” என்று கூறினார். பின்னர் தம் தாயிடம், அந்தச் சீடரை மகனாக ஏற்றுக்கொள்ளும்படி ஒப்படைத்தார் எனும் விபரத்தை யோவான் பதிவுச் செய்துள்ளார்.


சிந்தனைக்கு.

நேற்று திருச்சிலுவையின் மாட்சியை நினைவுகூர்ந்து அதனை வணங்கிய நமக்கு இன்று மற்றுமொரு விழா கொடுக்கப்பட்டுள்ளது. ஆம் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) எனும் விழாவாகும். 

துயரங்களுக்கு ஒரு விழாவா? என்று நம்மில் பலர் நி  னைக்கக்கூடும். துன்பமின்றி (சிலுவையின்றி) மீட்பு இல்லை. துன்பம் நமது நமது சாட்சிய வாழ்வின்ஒரு பகுதி. துன்பமின்றி சாட்சிய வாழ்வு சாத்தியமாகாது. ஆனாலும், துன்பம் ஒருநாள் இன்பமாக மாறும் என்பதையும் மறுப்பதற்கில்லை. சுருங்கச் சொன்னால், கிறிஸ்தவமானது  இன்பமும் துன்பமும் நிறைந்த ஒரு ஆன்மீகப் பயணமாகும். இன்றுவரை கிறிஸ்துவுக்காக எவ்வகை துன்பமும் ஏற்காமல் யாரும் புனிதர் ஆனதில்லை. இவர்களில் முகவும் குறிப்பிடத்தக்கவர்  அன்னை மரியா. இவர்  வியாகுலத் தாய். 


புனித அல்போன்ஸ் அவர்கள் தன் வாழ்வில் துன்பப்படும் பொழுது "எனக்கு துன்பத்தை தாரும். மேலும் அதை எதிர்கொள்ள கூடிய ஆற்றலையும் தாரும் " என்று இறைவனிடம் வேண்டினர் என்று அறிகிறோம். இத்தகைய மனநிலை கொண்டர்கள் தான் உணமை சீடர்கள். இனபமும் துயரமும் கிறிஸ்த வாழ்வில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. இரு பக்கங்களும் இருந்தால் தான் ஒரு நாணயத்திற்கு மதிப்புண்டு. 

இன்றைய முதல் வாகத்தின் ஒளியில், நம்முடைய அன்றாட வாழ்விலே கிறிஸ்து  என்ற உடலில்  கிறிஸ்தவர்களாகிய நாம் பல உறுப்புகளாக இருந்து, இனபத்துன்பங்களை மனமுவந்து ஏற்று, நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர அழைக்கப்படுகிறோம். முதல் வாஞகத்தில் பவுல் அடிகள்  வலியுறுத்துவத்ற்கு ஏற்ப, நம்மிடையே எவ்வித ஏற்றத்தாழ்வும் பாகுபாடும் இல்லாத வாழ்வை வாழ்ந்து கிறிஸ்தவ வாழ்விற்கு சான்று பகர, வியாகுலத் தாய்  அன்னை மரியாவின் முன்மாதிரியில்  முற்பட வேண்டும்.


இறைவேண்டல்.

துன்பத்தின் வழியாக இறைமாட்சி கண்ட அன்பு இயேசுவே! நான் ஏற்றுள்ள இந்த கிறிஸ்தவ சிலுவை வாழ்வில் வருகின்ற துன்பங்களை உம்முடைய மீட்புத் திட்டத்திற்காக ஏற்றுக்கொண்டு, திருஅவையின் தாயாம், உமது வியாகுல தாயின் பரிந்துரையில்,  எந்நாளும்  என் சொல்லாலும் செயலாலும் நற்செய்தி மதிப்பீட்டிற்கு  சான்று பகர  அருள் புரிவீராக.  ஆமென்.

ஆர்.கே.சாமி 

Tamil Survey Popup Image