புதைப்பதால் என்ன இலாபம்? | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

பிரேசில் நாட்டில் செல்வமிக்க மனிதர் தானே சிக்குயின்கோ என்பவர். ஒரு முறை இவர் பத்து இலட்சம் டாலர் மதிப்புமிக்க தமது பெண்ட்லே சொகுசு காரை மண்ணுக்குள் புதைக்க விரும்புவதாக விளம்பரம் கொடுத்தார். பொதுவாகவே இப்படி ஒரு விளம்பரம் கொடுத்தால் அந்த மனிதரை நாம் எப்படிக் கருதுவோம் ? “இவனுக்குப் புத்திக் கெட்டுப்போச்சு”, “மனநிலை சரியில்லாதவன்”, “அறிவில்லாதவன்” என்றுதானே பேசுவோம். ஆம், பல ஊடகங்களும், பத்திரிகைகளும் இவர், பத்து இலட்சம் டாலரை வீணடிக்கப்போகிறாரே என்று குறை கூறின.

பெண்ட்லே காரை அவர் புதைப்பதாகச் சொன்ன நாள் வந்தது. ஏராளமான மனிதர்கள் வேடிக்கை பார்ப்பதற்காக அவர் வீட்டுக்குப் படையெடுத்து வந்தனர். காரைப் புதைக்கும் அளவுக்கு மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. எல்லாரும் ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். பள்ளத்திற்கு அருகில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரைப் புதைக்கும் ஏற்பாடுகள் தொடங்கின. காரைப் பள்ளத்திற்குள் இறக்கினர்.

மக்கள் கூட்டத்திலிருந்து, "விலையுயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கின்றீர்களே? இது எப்படி உங்கள் இறப்பிற்குப் பிறகு பயன்படும்? யாருக்காவது தானமாக அல்லது இதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்குப் பயன்படுமே!” என்று ஆங்காங்கே குரல்கள் கேட்டன. அப்போதுதான் சிக்குயின்கோ, "இப்படி யாராவது செய்வார்களா? பத்து இலட்சம் டாலர் மதிப்புமிக்க கா யாராவது முன்வருவார்களா?" என்று சொன்னதும் சுற்றி நின்றவர்களுக்குக் கோபம் தலைக்கேறியது. காரைப் புதைக்க

நான் ஓர் உண்மையை உங்கள் அனைவருக்கும் சொல்லவே இப்படி ஒரு விளம்பரம் கொடுத்தேன். பத்து இலட்சம் டாலர் மதிப்பு மிக்க காரைப் புதைக்கிறேன் என்று சொன்னதும் உங்கள் அனைவருக்கும் கோபம் வருகிறது. நான் ஒன்று உங்களிடம் கேட்கிறேன். "மனித உடல் உறுப்புகளைவிடவா மதிப்பு மிக்கவை இந்த கார்கள். ஆனால், உடல் உறுப்புகளான இதயம், கண், நுரையீரல், தோல், முடி என அனைத்து இருக்க முடியும் ? யாருக்காவது தானமாகக் கொடுக்க முன்வரலாமே!” உறுப்புக்களையும் மண்ணிலே புதைப்பதால் யாருக்கு என்ன பயன் என்று சொன்னார்.

எதையும் கொண்டு வந்ததுமில்லை. எதையும் கொண்டு செல்வதுமில்லை. பின் ஏன் பகிரா மனநிலை?

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image