கோபம் என்ற நெருப்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | .11.03.2024

ஏன் உனக்கு இவ்வளவு கோபம் கோபத்தால் எதை சாதித்தாய்? கோபத்தால் உனக்கு நன்மையும் நல்ல பெயரும் கிட்டியதா?

கோபத்தால் இன்று உன் மனதிற்கு 
நெருக்கமானவர்கள் கூட இப்பொழுது தொலைவில் இருப்பதை போன்று உணர்கிறாய் என்றால் அதற்கு காரணம் நீ தான்.

உன் முன்கோபம் தான் என் மீதும் 
கோபப்படுகிறாய் உன்னுடன் தான் நான் இருக்கிறேன் ஆனால் நீயோ நான் உன்னை நிற்கதியாய் விட்டு விட்டேன் என்று புலம்புகிறாய்.

உன்னிடம் நிறைய நல்ல குணங்கள் உள்ளது ஆனால் அதை உன் கோபம் ஒன்றே முன்னின்ற்று மறக்க செய்கிறது எல்லாரிடத்திலும் தன்மையாக பேசு.

கஷ்டம் வலி யாருக்கு இல்லை ஒருவர் உனக்கு கஷ்டத்தை ஏற்படுத்த நினைத்தால் அதை நீ அனுபவிக்கிறாய் என்றால் ஒன்று கர்மவினை தான் காரணம்.

இன்னொருன்று நான் அனுமதிக்காமல் அவை உன்னிடம் வராது கஷ்டமும்  துன்பமும் உன்னிடம் வருகிறது என்றால் உனக்கு சில விஷயங்களை புரிய வைக்க தான்.

கோபத்தில் எடுக்கும் பல முடிவுகள் தவறாகவே மாறும் நிதானத்தில் எடுக்கும் சில முடிவுகள் பல தவறுகளை சரி செய்யும் என்பதை நினைவில் கொள்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை‌ இயேசுவே.

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் 

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி