புதிய புனிதர்களைப் பின்பற்ற உறுதி கொள்ளுங்கள்' திருத்தந்தை வேண்டுகோள்! | Veritas Tamil

புதிய புனிதர்களைப் பின்பற்ற உறுதி கொள்ளுங்கள்'
திருத்தந்தை லியோ வேண்டுகோள்!
"மதங்களுக்கு இடையேயான உரையாடல் காலத்தின் கட்டாயம்" வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் புதிதாக ஏழு பேருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. திருத்தந்தை லியோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதிதாகப் புனிதர் பட்டம் பெற்றவர்கள்!
- ஆர்மீனியாவில் தியாக வாழ்வை வாழ்ந்த ஆயர் இக்னேஷியஸ் மாலோயன்
- "திரு அவை மீதான அன்புதான் பணியின் அடித்தளம்"
- பாப்புவா நியூ கினியாவின் புனித பீட்டர் தோ ரோத்.
- வெனிசுலாவின் புனித ஜோஸ் கிரகோரியோ ஹெர்னாண் டஸ் மற்றும் புனித கார்மென் ரெண்டிலிஸ்.
- ஈக்வடார் புனித மரியா துரொன் காத்தி,
- மிஷனரி இறை இரக்கத்தின் சகோதரிகள் சபையின் நிறுவனர் புனித வின்சென்சா மரியா பொலோனி,
- இத்தாலிய வழக்கறிஞர் புனித பார்த்தலோ லாங்கோ.
இம்மாபெரும் நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை லியோ, "திரு அவை, ஒவ்வொரு மொழியிலும் கலாச்சாரத்திலும் உள்ள அனைத்து நம்பிக்கையாளர்களையும் அரவணைத்து, கடவுளின் மக்கள், கிறிஸ்துவின் உடல் மற்றும் தூய ஆவியின் உயிருள்ள ஆலயமாக நம்மை ஒன்றிணைக்கிறது" என்பதை நினைவூட்டினார்.
இறுதியாக , இந்தப் புனிதர்கள் நம்பிக்கையின் அடையாளங்கள் என்றும், அவர்கள் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் எடுத்துக்காட்டுகள் என்றும் குறிப்பிட்டார். உலகெங்குமிருந்தும் திரு அவையை அலங்கரிக்கும் இந்தப் புனிதர்களால், உலகிலும் திரு அவையிலும், நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டு வரக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Daily Program
