கொடூரமான இதயத்தைக் கொண்டிருந்தால் கடவுளை தந்தை என்று அழைக்க முடியாது | Veritas tamil

 

நீங்கள் கொடூரமான இதயத்தைக் கொண்டிருந்தால் கடவுளை உங்கள் தந்தை என்று அழைக்க முடியாது - திருத்தந்தை


புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த விசுவாசிகளிடம் தனது மூவேளை செபத்தில் உரையாற்றிய திருத்தந்தை லியோ "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" ஜெபத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவூட்டினார். கடவுள் எப்போதும் நமக்காக இருக்கிறார், அதனால்
கடவுளின் நன்மையால் நீங்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஜூலை 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தை லியோ XIV அவர்களின் மூவேளை செபத்தின் ஒரு முக்கிய  செய்தி "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே"என்ற ஜெபத்தின் வலிமையும் முக்கியத்துவத்தையும்  மையமாகக் கொண்டு இருந்தது .

"இது அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைக்கும் செபம்".  இந்த ஜெபத்தில்தான் கடவுளை "அப்பா' 'தந்தையே என்று குழந்தைத்தனமான எளிய  முறையில், பிள்ளைகளுக்குரிய உரிமையில் அழைத்து, செபிக்க  நம்மை அழைக்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.

கத்தோலிக்க திருஅவையின் மத போதனைகளும் இதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன என்று திருத்தந்தை  கூறினார்.  இறைமகன் இயேசு கற்பித்த  ஜெபம் நமக்குத் தந்தையை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் நம்மை நமக்கு வெளிப்படுத்துகிறது " என்று கூறினார். நாம் எவ்வளவு நம்பிக்கையுடன் தந்தை கடவுளிடம்  ஜெபிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவரின் அன்பான குழந்தைகள் என்பதைக் கண்டுபிடித்து, அவருடைய அன்பின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறோம் என்பது எவ்வளவு உண்மை என்பதை திருத்தந்தை வலியுறுத்தினார்.

ஒவ்வொரு தருணத்திலும் வழங்குங்கள் 
அன்றைய நற்செய்தியை மீண்டும் ஒருமுறை திருப்பி பார்த்து "எதிர்பாராத விருந்தினரை வரவேற்க ஒரு நண்பருக்கு உதவ நடு இரவில் எழுந்திருக்கும் ஒரு மனிதனின் மனதையும், மற்றும் தனது குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கொடுப்பதில் அக்கறை கொண்ட, ஒரு தந்தையின் குணத்தையும் ஒப்பிட்டு கடவுளின் தந்தைக்குரிய தந்தையின் சிறப்பியல்புகளை திருத்தந்தை நினைவு கூர்ந்தார்.

"எந்த சூழ்நிலையிலும் நாம் கடவுளிடம் வரும்போது அவர் ஒருபோதும் நம்மைப் புறக்கணிப்பதில்லை" என்பதை இந்த நற்செய்தி பகுதி  நமக்கு நினைவூட்டுகின்றது.

அவர் எப்போதும் நமக்கு செவிசாய்ப்பார். மேலும் அவர் சில சமயங்களில் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் வழிகளில்  பதிலளித்தாளும், சில சமயங்களில் நம்மால் புரிந்துக்கொள்ள முடியாது. இந்த தருணங்களிலும் கூட "நம்பிக்கையுடன் ஜெபிப்பதை நிறுத்தக்கூடாது  ஏனென்றால் அவரில் நாம் எப்போதும் ஒளியையும் பலத்தையும் காண்போம்" என்று  வலியுறுத்தினார்.

"கடவுளின் குழந்தைகளாக இருப்பதன் அருளைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளாக ஒருவரையொருவர் நேசிப்பதன் மூலம் அனைவரையும் கிறிஸ்துவின் அன்பினால் சகோதார சகோதரிகள் என்று ஏற்றுக்கொள்ள முடியும். 

உங்கள் வாழ்க்கையில் கடவுளின் நன்மையைப் பிரதிபலிப்போம்

இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்போதுm "கடவுளை 'எங்கள் தந்தை' என்று அழைக்கும்போது நாம் கடவுளின் குழந்தைகளாக நடந்து கொள்ள வேண்டும்" என்று கார்தேஜின் புனித சைப்ரியன் வலியுறுத்திய வார்த்தைகளை  நினைவு கூர்ந்தார். அதேபோல், புனித ஜான் கிறிசோஸ்டம் "நீங்கள் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற இதயத்தைப் கொண்டிருந்தால் கடவுளை  உங்கள் தந்தை என்று அழைக்க முடியாது" என்றார்.

"நாம் கடவுளை "தந்தை" என்று அழைத்துவிட்டு, மற்றவர்களிடம் கடுமையாகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் இருக்க முடியாது" . அதற்கு பதிலாக, "அவருடைய நற்குணங்களாகிய  பொறுமை, கருணை ஆகியவற்றால் நாம் நம்மை மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அவரது முகம், ஒரு கண்ணாடியில் தெரிவது  போல நம்மில் பிரதிபலிக்கும்"  என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக,  கடவுள் நம்மை நேசிப்பது போல எல்லோரையும் நேசிக்கவும், திறந்த மனதுடனும் அக்கறையுடனும் எவரையும் ஏமாற்றாமலும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.