பசுமை தமிழகம் | Veritas Tamil

விரிவாக தமிழக வரலாற்றினை LIGO அறிஞர்கள் எழுதியுள்ளனர் என்றாலும் முதுபெரும் அறிஞர் கே.கே.பிள்ளை, டாக்டர்.மா.இராசமாணிக்கனார் ஆகியோரின் ஆய்வுக் கருத்துக்கள் மேலானவை. தமிழக இயற்கை அமைப்பு பற்றி இவர்கள் விரிவாக எழுதியுள்ளனர். தமிழகத்தின் கிழக்கு. மேற்கு தெற்குப் பகுதிகளில் கடலும் வடக்கே தக்காணப் பூமியும் இதன் எல்லைகளாய் இருந்துள்ளன. இங்கு மேற்கு மலைத் தொடர்ச்சி பாதுகாக்கும் மேற்குப் பகுதிச் சுவர் வேலிபோல் அமைந்துள்ளது. இதில் கோவையை அடுத்த பாலக்காட்டு கணவாயும், நெல்லையை அடுத்த ஆரல்வாய் மொழியும். மேற்கே செங்கோட்டை நுழைவாயிலும் குறிப்பிடத்தக்கவை.

தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் ஆறுகள் பலவும் மேற்கு மலைத்தொடரிலிருந்து புறப்பட்டு கிழக்கே பாய்ந்து வருபவையாகும் இதில் காவிரி, வைகை, தாமிரபரணி, பாலாறு. செய்யாறு. தென்பெண்ணை குறிப்பிடத்தக்கன. இவை தவிர பல குறும் ஆறுகள் மேற்குமலைத் தொடரில் புறப்பட்டு கேரள மண்ணிற்கு பாய்கின்றன. தமிழ்நாட்டில் சேர்வராயன், கல்ராயன், பச்சைமலைப்பகுதியிலும் ஆறுகள் புறப்பட்டு வருகின்றன. இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாண்டி பல சிற்றாறுகள் புறப்பட்டு ஓடுகின்றன. இதில் முக்கியமானது பழையாறு என்பதாகும்.

தமிழகம் முதலில் குமரிக்கு தெற்கே இலங்கை சேர்ந்த நிலப்பரப்பாக அமைந்துள்ளது. இது ஏழ்தெங்கு நாடு, ஏழ்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடு உடையதாய் இருந்துள்ளது. கி.மு 2500கில் ஏற்பட்ட கடலகோலால் இலங்கை தனித் தீவாகியுள்ளது இதன் பின் கி.மு. 500இல் ஏற்பட்ட கடல்கோலால் தமிழக தெரகெள்லைப்புரப்பும் குமரியாறும் கடலுள் மூழ்கின. இக்கடல் கோலுக்கு முன்பே எழுதப்பெற்றதே தொல்காப்பியம் என்பது தமிழ ஆய்வாளர் கூற்று முதல் இரு கடல்கோல்களுக்குப்பின் தமிழ மையமான யாண்டிய நாட்டு மதுரையம்பதியே தமிழ் நிலத்தின் தலைநகரானது.

தமிழக நிலம் கடல்கோளால் மூழகியபோது தமிழ் மண்ணின் வட எல்லையாக வேங்கட மலையே இருந்துள்ளது. இந்த வடஎல்லை என்பது விஜய நகர ஆட்சியின் போது மாறியது. குமரிக்கண்டம் கடலுள்மூழ்கிய போது வேங்கடமே வடஎல்லையாய் இருந்தது காலமாற்றத்தால் இந்த எல்லை மாறத் தொடங்கியது. கடலுள் மூழ்கியதை லெமூரியாக் கண்டம் என்றனர் மேலை நாட்டு ஆய்வாளர்கள் இங்குதான் முதன்முதலில் மனித இனம் தோன்றியதாயும் ஆய்வுகளில் கூறியுள்ளனர். பலகோடி ஆண்டுகட்கு முன்பே இங்கு மனித இனம் வாழ்ந்ததற்கான கற்பாறைப் படிவுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

விந்திய மலைக்கு வடக்கே தற்போதுள்ள கங்கையாறு பாயும் சமவெளியும். இமயமலையும், முன்பு கடலுள் மூழ்கி இருந்ததாய் கூறப்படுகின்றது. வடபகுதி கடலுள் இருந்த போது தென்னிந்தியாவில் காடு மலை நிறைந்த பகுதிகளில் மக்கள் நாகரிகம், பண்பாட்டுடன் வாழ்ந்துள்ளனர். இந்திய நாட்டின் வடகிழக்கில் வாழ்ந்த ஆதி மக்கள் காசிகளின் புதை குழிகள் புதிய கற்காலத்தவையாகவும், தென்பகுதியில் வாழ்ந்தோரின் புதை குழிகள் இரும்புக் காலத்தவையாகவும் உள்ளன. தென்னிந்தியாவில் கி.மு.2500இல் மக்கள் குடியேறத் தொடங்கி. திராவிட இனப்பிரிவு ஏற்பட்டதாய் ஆய்வாளர் கூறுகின்றனர்.

தமிழக இயற்கை அமைப்பு கடல், மலை, நீர் பாதுகாப்பாக அமைந்துள்ளது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்கள் இறந்தவர்களின் சடலங்களை அகன்ற பெருங்குழிகளில் புதைத்தனர். இக்குழிகளே பெருங்கற்புதைவுகள் என்று கே.கே. பிள்ளை கூறுகின்றார். இப்புதைவுகள் ஏற்பட்ட காலம் பெருங்கற்புதைவு காலம் என்று கூறுவர். புதியகற்காலத்தின் பின் இரும்புக் காலம் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. ஆனால் வட இந்தியப் பகுதியில் செம்புக்காலம் தொடங்கியது. இதற்குக்காரணம் தமிழ் மக்கள் இரும்பைப் பெரிதும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தமிழ்நிலத்தின் இயற்கை அமைப்பு பல்வகை நறுமணப் பொருட்கள் விளைய உதவின. இதனால் பல நாடுகளும் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். இங்கு விலையும் மிளகு உலகத்தில் பெரிதும் வாங்கி பயன்படுத்தப்பட்டது. இயற்கை வளத்தால் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர். பிரெஞ்சுக்காரர். போர்த்துக்கீசியர். டச்சுக்காரர். ரோமானியர். கிரேக்கர். யூதர் என்று பலரும் வந்து தங்கினார். கடல் வளமும் மலைவளமும் தமிழ் நிலத்தில் மேலோங்கி இருந்தது என்பதை வரலாறு தெளிவாய் எடுத்துரைக்கின்றது.