பறவைகள் ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.05.2024

பறவைகளுக்குக்
கட்சியில்லை,
தலைவனில்லை,
பிரிவினையில்லை, மதவெறியில்லை,
சாதி சண்டையில்லை
கிடைத்த உணவை பகுத்துண்டு சிறகடித்துப் பறக்கின்றன.
பறவைகள் மற்ற விலங்குகளையோ
பறவைகளையோ
வேட்டையாடி அழிப்பதில்லை
மரங்களை வெட்டி அவைகள் நலனுக்குப் பங்கம்
விளைவிக்காமல்
கூடிப் பறக்கின்றன.
பறவைகள் போல் பண்புகளை
மனமென்னும் சிறகிலேற்றி சிறகடித்துப் பறப்போம்
பறவைகள் போல்
பறக்கும் ஆசை நமதாகட்டும் .
சாமானியனின் சிந்தனைகள்.
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
