குழந்தைத் தொழிலாளர் தடுப்பு நாள் | ஜுன் 12

குழந்தைத் தொழிலாளர் தடுப்பு நாள்
    

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்  உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 
    சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.
    இந்தியாவில், 14 வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகள், அவர்களின் பாரம்பரியத் துறையில் வேலைசெய்வது சட்டப்படி குற்றமில்லை எனச் சொல்கிறது. அதேபோல், 14 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களையும் குழந்தைகளாகக் கருதாமல், அவர்களை வேலை செய்ய சட்டம் அனுமதியளிக்கிறது. துணிக்கடை போன்ற நிறுவனங்களில் இன்றும் வளரிளம் பருவத்தைச் சேர்ந்த குழந்தைகள் பலர் வேலை செய்துவருகின்றனர். 15 மணி நேரம் தொடர்ந்து நின்றால், அது பிற்காலத்தில் அவர்களின் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கும்.