சர்வதேச ஊதா தினம் (வலிப்பு நோய் விழிப்புணர்வு) | March 26
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலைப்பொழுதில் அனைவரும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு வேகமாய் ஓடிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று கூட்டத்தின் நடுவில் ஒருவர் பொத்தென்று கீழேவிழுந்தார். அவரின் தசைகள் இறுக்கமாகி உடல் முழுவதும் உதற ஆரம்பித்து, வாயிலிருந்து நுரைத் தள்ளியது. கீழே விழுந்தவர் சில நிமிட போராட்டத்திற்கு பிறகு நினைவுக்கு வந்தார். ஆம், அவருக்கு வலிப்பு வந்திருந்தது. கனடா நாட்டின் நோவா ஸ்காடியா பகுதியைச் சேர்ந்த கேஸடி மெகான் (ஊயளளனைல ஆநபயn) தனது ஒன்பதாம் வயதில் 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தினார். 2009 ஆம் ஆண்டு நோவா ஸ்காடியா - (வுhந நுpடைநிளல யுளளழஉயைவழைn), மேரிடைம்ஸ் எபிலெப்ஸி கூட்டமைப்பு மற்றும் அனிதா காஃப்மேன் அமைப்பு கூட்டுச் சேர்ந்து உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். ஆண்டுதோறும் மார்ச் 26 ஆம் நாளை வலிப்பு விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடித்தனர். இந்த நாளில் மக்கள் அனைவரும் ஊதா நிற ஆடையணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் ஊதா நாள் (Pரசிடந னயல) என்றும் அழைக்கப்படுகிறது.
உலக சுகாதர அமைப்பின் (றுழசடன ர்நயடவா ழுசபயnணையவழைn) ஆய்வறிக்கையின்படி உலக அளவில் 50 மில்லியன் மக்கள் வலிப்புநோயினால் (நுpடைநிளல) பாதிக்கப்படுள்ளனர். மூளைச் செல்கள் மற்றும் மூளை நரம்புச் செல்களில் ஏற்படும் பாதிப்பின் விளைவாகவே வலிப்பு உண்டாகிறது. ஒரு மனிதனின் வாழ்நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சில நேரங்களில் இந்த நோய்க்கான காரணம் என்ன என்பதை கண்டறியமுடிவதில்லை. இருந்தாலும், தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள், நரம்பு மண்டலக் குறைபாடு, விபத்தினால் தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள், மூளைக்கட்டிகள் போன்றவை வலிப்பு ஏற்பட காரணமாக அமைகிறது.
ஒருவருக்குத் திடீரென வலிப்பு வந்துவிட்டால் முதலில் வலிப்பு வந்தவரின் பக்கத்தில் கூரான பொருள்கள் எதுவும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அமைதியாக அவரைத் தரையில் படுக்கவைத்து கீழே விழுவதிலிருந்து தவிர்க்கலாம். தலை வேகமாகத் தரையில் படுவதைத் தவிர்ப்பதற்கு, தலைக்கு மென்மையான பொருள்களை வைக்கலாம். இறுக்கமான ஆடையைத் தளர்த்திவிடலாம். வலிப்பு வந்தவரை ஒருபக்கமாகச் சாய்த்து வாயில் உள்ள உமிழ்நீர் முற்றிலும் வெளிவரும்படி செய்யலாம். இதன்மூலம் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளமுடியும். வலிப்பு எவ்வளவு நேரம் வருகிறது என்பதை கண்டறிவது அவசியம். பொதுவாக 5 நிமிடங்களுக்குள் வலிப்பானது சரியாகிவிடும். அப்படியில்லையெனில் மருத்துவமனையை உடனடியாக அணுகுவது சிறந்தது. வலிப்பு நின்றவுடன் நோயாளியை ஓய்வெடுக்க அல்லது தூங்கவிட வேண்டும்.
வலிப்பு நோயின் வகை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்றவகையில் மருத்துவர் சரியான சிகிச்சை அளிக்கும் போது வலிப்பு நோய் கட்டுப்படுத்தப்படும். மருத்துவரின் அறிவுரைப்படி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை (யுவெi-நுpடைநிவiஉ னசரபள) உட்கொள்ள வேண்டும். வலிப்பு கட்டுப்படுத்தப்படாதவர்களுக்கு மூளை அறுவை சிகிச்சை மற்றும் கீட்டோஜெனிக் டயட் (அதிக கொழுப்பு சத்துள்ள உணவு) பரிந்துரைக்கப்படுகிறது.