அன்பே வாழ்வு

நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.

திருப்பாடல்கள் 32-8.

 நாம் வழி தெரியாது தவிக்கும் நேரங்களில், மன அழுத்தம் ஏற்பட்டு குழப்பமான சூழ்நிலையில் தள்ளப்படும் போது எந்த ஒரு தீடீர் முடிவையும் எடுக்க கூடாது. இறை சமூகத்தில் நம் எண்ணங்களை ஊற்றுவோம். ஆண்டவர் நமக்கு அறிவுரை கூறி வழி காட்டுவார்.

நம்மில் பலர் தற்கொலை போன்ற தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கி நின்று ஜெயிக்க தெரியாதவர்கள், பிரச்சனைகளுக்கு தற்கொலைதான் முடிவு என்று எண்ணுகிறார்கள். தற்கொலை, எந்த ஒரு வேதனைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதேயில்லை. அது இன்னும் அதிகமான நரக வேதனைக்குள்ளாக நம்மை வழிநடத்திச் செல்லும்.

யூதாஸ் இயேசுவை காட்டி கொடுத்ததும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு இருந்தால் மன்னிக்கப்பட்டு இன்று ஒரு நல்ல இடத்தில் இருந்திருப்பார். ஆனால் அவர் உடனே எடுத்த  முடிவு அவர் வாழ்ந்த வாழ்வை அர்த்தமற்றதாக மாற்றி விட்டது..

அன்பு சகோதரமே, யார் நமக்கு எதிராகவெழுந்தால் என்ன? ஆண்டவர் நம்மை கைவிட மாட்டார். அவரை நாம் தேடி சென்றால் நிச்சயமாக அந்த சூழ்நிலையை தாண்டும் வழியை அவர் காட்டுவார் என்று நம்புவோம். ஆண்டவர் தாயினும் மேலாக அன்பு செய்கிறார்.  அவர் ஆலோசனை சொல்லுவார் . அறிவு புகட்டுவார். நம்மை விட்டு விலகவமட்டார். ஒரு போதும் நம்மை கைவிட மாட்டார்.

ஜெபம்:.  ஆண்டவரே,  நீர் எங்களோடு இருந்து , எங்களுக்கு  அறிவு புகட்டி வழி காட்டுவதற்காக உமக்கு நன்றி.  ஆண்டவரே உடல் நோயினால், மன அழுத்தத்தினால், துன்பங்கள் தொல்லைகளினால் தவறான முடிவை தேடும் அனைவரையும் உம் பாதம் வைக்கிறோம். ஆண்டவரே நீரே அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களுக்கு ஆறுதல் கூறி , அறிவு புகட்டி, நடக்க வேண்டிய வழியை காட்டும். எல்லோரையும் ஆசீர்வதியும் .ஆமென்.