எது நம்பிக்கை ...? ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 08.05.2024
  எல்லாம் ஒழுங்காக நடக்க நீ நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.
எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும் நீ தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே நம்பிக்கை.
நம்பிக்கை வெளியில் இல்லை முதலில் உனக்குள் வேண்டும்.
நீ நினைப்பதெல்லாம் உனக்கு நடக்க நீ பலமாக உணர்ந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை.
நீ நினைக்காத பயங்கரங்கள் உனக்கு நடந்தாலும், நீ அசராமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை.
உற்றாரும் பிறரும் உனக்கு உதவி செய்ய
நீ நிதானமாக இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.
உனக்கு உதவ யாருமே தயாராக இல்லாத சமயத்திலும் அனைத்தையும் எதிர் கொள்ள நீ தயார் என்றால் அதன் பெயரே நம்பிக்கை.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் வாழ்வும் நம்பிக்கையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.
மரியே வாழ்க
                   
சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி
            
    
  
  
  
  
  
  
- Reply
 
Permalink