நீ வருவாய் என.... | Regina | Rain

மௌனமான காலைப் பொழுதை
ஆர்ப்பரித்து தட்டி எழுப்பி விட்டுச்
செல்கிறது மழைக்காற்று.
வெடி வெடித்து அழைத்து வருகுது
இடியும் மின்னலும்..
தூறல் என்னும் சாரல்
எண்ணிய ஆட்கொள்ளும்போது,
என்னை இதயமாய் வருடிச் சென்றது
புயல் காற்று!
நான் கடுங்குளிரில் உறைந்து கிடந்தாலும்
மனம் மட்டும்
மழையே நீ வரவேண்டும் என்கிறது.....
ஏனெனில்
பூமியெங்கும் செழிப்பாய் விளங்க
குளம்குட்டைகளில் நீர் பெருக்கெடுக்க
ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் தழைக்க,
ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள
அனைத்து உயிரினங்களுக்கும் என்றும்
துணையாய் நீ வேண்டுமே...

தாகத்தால் தவிக்கிறோம்
தள்ளாடி விழுகிறோம்
விவசாயம் இல்லாமல் அலைகிறோம்
உணவு கிடைக்காமல் அழுகிறோம்..
மேகமே!
உன் குளிர்ந்த முகம் காண
ஆவலுடன் காத்திருக்கின்றோம்
மழையே! மழையே! நீ வருவாய் என....

 

எழுத்து

திருமதி. ரெஜினா