கருவறையே கல்லறையாய்...!
இந்த உலகை பார்ப்பதற்கு முன் தன் கண்களை முடிய சிசுவின் கவிதை
கருவறையே கல்லறையாக்கிய தாய்மார்களுக்கு இக்கவிதை ஒட்டு சமர்ப்பணம்
கருவாக உருவெடுத்தவளே !
என்னை கழுவி தூக்கி எரியுதுணித்தாய்,
பலரின் வற்புறுத்தலால்
நீயும் என்னை வேண்டாம் என்றாயே! ஏன் ?
கருப்பையின் இருட்டறையில்,
பயம் என்ற மொழியை மட்டும் கருக்கொடுத்தாய்
என் சின்ன இதயம் என்ற தன் துடிப்பை
நிறுத்தும் என்று நீ துடித்தாய் !
உறுதியில்லா இருதயத்தை உதறித்தள்ளினாய்
ஏன்?
நானும் கூக்குரலிட்டு என்னை
அனுப்பியவரிடம் கேட்டேன்,
ஆசைப்பட்டது தான் என் தவறோ என்று
நமது இதயம் போன்றதில்லை இறைவனுக்கு
நியாயமான என் குரலுக்கு செவிமடுத்தார்!
கருக்கலைப்பு செய்த பின்னும் நான் வளர
கருவறையில் இடமளித்தார்.
அதே சமயத்தில் மருத்துவருக்கும்
நன்றியுள்ளவளாய் நானும் அங்கு
வளர்ந்தேன்.
இவ்வுலகிற்கு வரும் தருணம்,
ஆண்பிள்ளை என்னும் எதிர்பார்ப்பில் ஆழ்ந்தேன்
ஆனால் எதிர்பார்ப்போ
ஏமாற்றத்தில் முடிந்தது!
சமுதாயமோ! பெண் பிள்ளையா?
ஐயோ! சாபம்!
பிறவிப்பாவம் என்றது - ஏன்?
நெல்மணிக்கும் கள்ளிப்பாலுக்கும்
இரையானது என் இதயம்
கண்மை விட்டு அலங்கரிக்க வேண்டிய தாயே
என்னை நீயே அலங்கரித்தாய்
சவப்பெட்டியில்.
அடுத்த பிறவி என்றிருந்தால் அதில்
உனக்கு நான் மகனாக பிறக்க
விரும்புகிறேன்!
என் வாழ்க்கை என்னும் கனவோ
மரணமாகவே கலைந்தது!
குழந்தைகள் தினத்தை கொண்டாட
ஆசைப்பட்ட நான்,
கல்லறை திருநாளையே காண முடிந்தது.
எழுத்து
அ. கிரிஸ்டலின் டாப்பிணி
Daily Program
