'மதச் சுதந்திரம் _ உண்மையைத் தேடுவதற்கும் வாழ்வதற்கும் இன்றியமையாத ஒன்று'_ திருத்தந்தை | Veritas Tamil

'மதச் சுதந்திரம் _ உண்மையைத் தேடுவதற்கும் வாழ்வதற்கும் இன்றியமையாத ஒன்று'
திருத்தந்தை அவர்கள் 'Aid to the Church in Need' என்ற திருப்பீட அறக்கட்டளையின் உறுப்பினர்களை அண்மையில் சந்தித்தார். அப்போது, மனித வாழ்க்கையின் அடிப்படை அங்கமாக மதச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான அவர்களின் பணியைப் பாராட்டினார்.
 கிறித்தவர்கள் உட்பட வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களுக்கு எதிராகப் பகைமையும் வன்முறைகளும் அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கிறது எனத் தெரிவித்த அவர், துன்புறுத்தப்படும் நமது சகோதர சகோதரிகளைத் திரு அவை ஒருபோதும் கைவிடாது என நம்பிக்கை அளித்தார்.
மேலும், "ஒவ்வொரு நபரின் மதச் சுதந்திரத்திற்கான உரிமை விருப்பத்திற்குரியது அல்ல; மாறாக, அவசியமானது" என்றும், "கடவுளின் சாயலில் பகுத்தறிவும் சுதந்திரமும் கொண்டு மனித மாண்புடன் படைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனிதரும் அவர் வாழும் சமூகமும் உண்மையைத் தேடவும், அதில் சுதந்திரமாக வாழவும், அதற்கு வெளிப்படையாகச் சாட்சியமளிக்கவும் மதச் சுதந்திரம் அனுமதிக்கிறது." என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, மதச் சுதந்திரம் என்பது சமூகத்தின் மூலைக்கல்; அதுவே, நமது மனசாட்சியைப் பண்படுத்துகிறது என்றும்
ஆகவே, மதச் சுதந்திரம் என்பது வெறும் சட்டப்பூர்வ உரிமையோ அல்லது அரசின் சலுகையோ அல்ல; மாறாக, உண்மையான நல்லிணக்கத்தைச் சாத்தியமாக்கும் ஓர் அடித்தள நிபந்தனை" என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். "மதச் சுதந்திரம் என்பது ஒவ்வொரு நாடும் அங்கீகரிக்கப்பட வேண்டிய உரிமை" என்ற இரண்டாவது வத்திக்கான் கவுன்சிலின் பிரகடனத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, "கத்தோலிக்கத் திரு அவை அனைத்து மக்களுக்கும் மதச் சுதந்திரத்தை எப்போதும் உறுதிசெய்யும்" என்றும் தெரிவித்துள்ளார்.“
இறுதியாக திருத்தந்தை அவர்கள்  உள்ளூர் கிறிஸ்தவர்கள் ஆதரிக்கப்படும்போது, அவர்கள் தங்கள் தாய்நாட்டில் அமைதிக்கான தூதர்களாக மாறுகிறார்கள்; சமூக ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பிரதிபலிக்கும் உயிரோட்டமான அடையாளங்களாக நிற்கிறார்கள் — வேறுபட்ட ஒரு உலகம் சாத்தியமென தங்கள் அயலாருக்கு காட்டுகிறார்கள்.” என தனது கருத்தை வலியுறுத்தினார். 

Daily Program

Livesteam thumbnail