திருத்தந்தையின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள் ! | Veritas Tamil
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தை ஏப்ரல் 13ஆம் தேதி திங்கள்கிழமை இன்று தொடங்குகிறார். இன்று காலை உரோமை நேரப்படி 9 மணிக்கு ஃபியூமிசினோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீயர்ஸின் ஹவாரி பூமேடியேன் சர்வதேச விமான நிலையத்திற்கு அல்ஜீரிய நேரப்படி காலை 10 மணிக்கு வந்து சேர்கிறார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தை ஏப்ரல் 13ஆம் தேதி திங்கள்கிழமை இன்று தொடங்குகிறார்.
இன்று காலை உரோமை நேரப்படி 9 மணிக்கு ஃபியூமிசினோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீயர்ஸின் ஹவாரி பூமேடியேன் சர்வதேச விமான நிலையத்திற்கு அல்ஜீரிய நேரப்படி காலை 10 மணிக்கு வந்து சேர்கிறார்.
அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் நகரை வந்தடைந்த திருத்தந்தை
அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் நகரை வந்தடைந்த திருத்தந்தை (ANSA)
அங்கு அவர் வரவேற்கப்பட்டு காலை மணி10:45 க்கு மகாம் எச்சாஹித் தியாகிகள் நினைவிடத்தைப் பார்வையிட்டு அங்கு வாழ்த்துரை வழங்குகிறார்.
பின்னர் மணி 11:15 க்கு எல் மௌராடியா ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார்.
தொடர்ந்து நண்பகல் 12:00 மணிக்கு ஜமா அல் ஜசீர் மாநாட்டு மையத்தில் அதிகாரிகள் சமூக அமைப்புகள் மற்றும் தூதரக உறுப்பினர்களுடன் சந்தித்து அங்கு உரையாற்றுகிறார்.
மீண்டும் பிற்பகல் மணி 03:45 க்கு அல்ஜியர்ஸின் பெரிய மசூதியைப் பார்வையிடுகிறார். இது மக்களிடையே ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்தக்கூடியதாக அமைகிறது.
மாலை மணி 04:35 க்கு தனிப்பட்ட முறையில் பாப் எல் ஓயெத் பகுதியில் உள்ள அகுஸ்தினார் மிசினரி சகோதரிகளின் நட்புறவு மையத்திற்கு சென்று அவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
பின்னர் மாலை மணி 05:10 க்கு ஆப்பிரிக்கா அன்னை பேராலயத்தில் அல்ஜீரிய மக்களைச் சந்தித்து உரையாற்றுகிறார்.
நன்றி வத்திக்கான் செய்தி