கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்களின் கவிதை நிகழ்ச்சிகள் | Veritas tamil
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணம், கலாபான் நகரில் அக்டோபர் 10ஆம் நாள் நடைபெற்ற கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தினத்தின்போது, 10 பள்ளிகளைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கவிதை நிகழ்ச்சிகள் வாயிலாகக் கடல் மாசுபாடு, மீன் பிடிப்பு குறைந்து வருதல், கடலோரச் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை எடுத்துரைத்தனர்.
கலாபான் நகராட்சி அரசின் மீன்வள மேலாண்மை அலுவலகம் ஏற்பாடு செய்த இப்போட்டிக்கு, “நம்பிக்கையின் கடல்” (Dagat ng Pag-asa) என்ற கருப்பொருள் வழங்கப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மீனவச் சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஓரியண்டல் மிண்டோரோ தேசிய உயர்நிலைப் பள்ளி முதலிடத்தைப் பெற்றது. பிளாஸ்டிக் கழிவுகள், சேதமடைந்த பவளப்பாறைகள், அழிவை ஏற்படுத்தும் மீன்பிடி முறைகள் ஆகியவற்றால் பாதிக்கப்படும் இளம் கடலாமையின் கதையை அதன் மாணவர்கள் தங்கள் நிகழ்ச்சியில் எடுத்துரைத்தனர். கடல்வாழ் உயிரினங்களையும் கடலோர வாழிடங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
நாக்-இபா தேசிய உயர்நிலைப் பள்ளி, “நிலிகாவ் அகோ நி மரினா” (Niligaw Ako ni Marina) என்ற நிகழ்ச்சியின் மூலம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. நகைச்சுவையையும் கற்பனையான காதல் கதையையும் பயன்படுத்தி, கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மதித்துப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. செரியாக்கோ ஏ. அபேஸ் நினைவு தேசிய உயர்நிலைப் பள்ளி மூன்றாம் இடத்தைப் பெற்றது. எதிர்காலத் தலைமுறைகளுக்காகக் கடலைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்பதை “நம்பிக்கையின் கடல்” என்ற நிகழ்ச்சியின் வழியாக வலியுறுத்தியது.
பிற பள்ளிகளின் நிகழ்ச்சிகளும் சுற்றுச்சூழல் சீரழிவு மீனவக் குடும்பங்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், சேதமடைந்த கடல்சார் சூழல் அமைப்புகளை மீண்டும் புதுப்பிக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டின.
கனுபிங் தேசிய உயர்நிலைப் பள்ளி, “மக்களின் பொறுப்பற்ற செயல்களுக்கு மத்தியில் கடலின் அரவணைப்பில்” (Sa Kandungan ng Karagatan sa Likod ng mga Walang Pakundangan) என்ற தலைப்பில் நிகழ்ச்சியை வழங்கியது. கடல் மாசுபாடு மற்றும் அழிவை ஏற்படுத்தும் மீன்பிடி முறைகளால் மீன்களின் எண்ணிக்கை குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஒரு மீனவரின் குழந்தையின் கதையை அது எடுத்துரைத்தது.
பராங் தேசிய உயர்நிலைப் பள்ளி, “காத்திருக்கும் கடல்” (Ang Dagat na Naghihintay) என்ற நிகழ்ச்சியில், மீன்பிடிக்கச் சென்ற தந்தை வெறுங்கையுடன் திரும்புவதற்காகக் காத்திருக்கும் குழந்தையின் நிலையைச் சித்தரித்தது. பின்னர் அந்தக் குழந்தை கடற்கரையில் கிடக்கும் குப்பைகளைச் சேகரிக்கத் தொடங்குவதன் மூலம், செயல்பாட்டில் இறங்குவதன் அவசியத்தை எடுத்துரைத்தது. இதனால் ஊக்கமடைந்த மற்றவர்களும் அதில் இணைந்தனர்.
மனக்பி தேசிய உயர்நிலைப் பள்ளி வழங்கிய “மீண்டும் நீலமாகும்” (Magiging Asul Muli) என்ற நிகழ்ச்சி, 2023ஆம் ஆண்டு மிண்டோரோவில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை நினைவுகூர்ந்ததுடன், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதிலும் கடலோரச் சூழலை மீட்டெடுப்பதிலும் சதுப்புநிலக் காடுகளும் பவளப்பாறைகளும் ஆற்றும் முக்கியப் பங்கையும் எடுத்துரைத்தது.
கலாபான் நகரில் உள்ள ஐந்து கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தின. அவை:
- ஹர்கா பிலோட்டோ பவளப்பாறை மீன் சரணாலயம்
- சிலோனாய் சதுப்புநிலப் பாதுகாப்புச் சூழல் பூங்கா
- மஹால் நா பங்கலான் கடல்சார் பூங்கா
- மைட்லாங் சதுப்புநிலம் மற்றும் கடற்கரை வனக் காப்பகம்
- கலேரோ–சலோங் கடற்புல் மற்றும் பவளப்பாறைகள் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி
இந்தச் சூழல் அமைப்புகள் கடல்வாழ் உயிரினங்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதோடு, மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவளிக்கின்றன. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்ளக் கடலோரச் சமூகங்களுக்கு உதவுகின்றன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ‘இறைவா உமக்கே புகழ்’ (Laudato Si’) திருமடலின் கருத்துகளையும் இப்போட்டி எதிரொலித்தது. நமது பொதுவான இல்லமான பூமியைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் இத்திருமடல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மனித நலனுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துரைக்கிறது. கடல்சார் சூழல் அமைப்புகள் சேதமடைவது, மீன்களின் பிடிப்பு குறைதல், உணவுப் பற்றாக்குறை, வாழ்வாதார இழப்பு போன்ற பாதிப்புகளை மீனவக் குடும்பங்களுக்கு ஏற்படுத்துகிறது.
போட்டியில் முதலிடம் பெற்ற ஓரியண்டல் மிண்டோரோ தேசிய உயர்நிலைப் பள்ளிக்கு 10,000 பிலிப்பைன்ஸ் பெசோவும், இரண்டாம் இடத்தைப் பெற்ற நாக்-இபா தேசிய உயர்நிலைப் பள்ளிக்கு 7,000 பெசோவும், மூன்றாம் இடத்தைப் பெற்ற செரியாக்கோ ஏ. அபேஸ் நினைவு தேசிய உயர்நிலைப் பள்ளிக்கு 5,000 பெசோவும் பரிசாக வழங்கப்பட்டன. பிற பள்ளிகளுக்குத் தலா 2,000 பெசோ ஆறுதல் பரிசுடன் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்தல், கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மதித்தல், அழிவை ஏற்படுத்தும் மீன்பிடி முறைகளைக் கைவிடுதல், சேதமடைந்த வாழிடங்களை மீட்டெடுத்தல் ஆகியவற்றில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என்பதே மாணவர்களின் நிகழ்ச்சிகள் வழியாக முன்வைக்கப்பட்ட முக்கியச் செய்தியாகும்.
கடலைப் பாதுகாப்பது விழிப்புணர்வுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது; கடலோர நீர்நிலைகளின் நலனைச் சார்ந்து வாழும் தனிநபர்களும் சமூகங்களும் நடைமுறைச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சிகளின் மையக் கருத்தாக அமைந்தது.