“அன்பு இல்லாத திருத்தம் காயப்படுத்தும்” | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 23-ம் வாரம் -வெள்ளி
11 செப்டம்பர் 2026
1 கொரி 16-19, 22-27
லூக்கா 6: 39-42
“அன்பு இல்லாத திருத்தம் காயப்படுத்தும்”
முதல் வாசகம்.
1. இந்த வாசகத்தில் பவுல், நற்செய்தியை அறிவிப்பது தமக்கு கொடுக்கப்பட்ட கடமை என்று கூறுகிறார். அதற்காக எந்த தனிப்பட்ட பலனையும் எதிர்பார்க்காமல், அனைவருக்கும் ஊழியம் செய்யத் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார்.
அனைத்து இன்தாரையும் மக்களை கிறிஸ்துவிடம் கொண்டு வருவதற்காக, அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார். ஆனால் கிறிஸ்துவின் உண்மையிலிருந்து அவர் விலகவில்லை இங்கே, இவிரிக்கிறார்,
மேலும், ஓர் ஓட்டப்பந்தய வீரர் வெற்றிக்காக கடுமையாகப் பயிற்சி செய்வது போல, கிறிஸ்தவ வாழ்க்கையிலும் சுயக்கட்டுப்பாடு, பொறுமை, விடாமுயற்சி அவசியம் என பவுல் எடுத்துக்காட்டுகிறார். உலக வெற்றி அழிந்துபோகும் மகுடத்தைத் தரும்; ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு அழியாத மகுடம் கிடைக்கும் என்பதை வலியுறுத்தி கூறுகிறார்.
நற்செய்தி.
இன்றை நற்செய்தியில் இயேசு, மற்றவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு முன், நம்முடைய குறைகளை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும் என்று போதிக்கிறார்.
ஒரு பார்வையற்றவர் இன்னொரு பார்வையற்றவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவார்கள் என்று இயேசு கூறுகிறார். அதுபோல, தன்னைத் திருத்திக் கொள்ளாத ஒருவர் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது பயனற்றது என்பதை இயேசு உணர்த்துகிறினார்.
மேலும், மற்றவரின் கண்ணில் இருக்கும் சிறிய தூசியைக் காணும் நாம், நம் கண்ணில் இருக்கும் பெரிய மரத்தடியைக் கவனிக்காமல் இருக்கக்கூடாது என்றும் இயேசு எடுத்துக்காட்டுகிறார்.
சிந்தனைக்கு.
இயேசுவின் நேற்றைய தொடர்ச்சியாக வரும் சமவெளிப் மறயுரையை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது, மறைநூலில் மிகச் சுருக்கமான உவமைகளில் ஒன்றைச் சந்திக்கிறோம் என்று சொல்லலாம்—இரண்டு குறுகிய வினாவடிவக் கேள்விகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.ஆவை, : ““பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?
இவை மிகச் சுருக்கமாக இருந்தாலும், இந்த வினாக்கள் மிகவும் வலிமையான செய்தியை யம் கண்முன் காட்டுகின்றன. ஓர் அறிவிலி மற்றொரு அறிவிலிக்கு வழிகாட்டுவதென்பது ஆபத்தானது. ஆகவே, முதலில் நம்முடைய தவறுகளைப் பார்த்து திருத்திக் கொள்வோம்; பின்னர் அன்புடனும் தாழ்மையுடனும் மற்றவர்களுக்கு உதவுவோம். மற்றவர்களுக்குத் தீர்ப்புக்கூறுமுன் நம்மையே ஆராய்ந்து கொள்வதே இயேசுவின் ஆழ்ந்த படிப்பினையாக உள்ளது.
பெருமை, பாவம் அல்லது அறியாமையால் நாம் குருடாக்கப்பட்டிருந்தால், அது நமக்கே தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் தவறான வழியில் நடத்தும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, ‘உன்னையே நீ அறிவாய்’ என்பதற்கு ஏற்ப, நமது குற்றம் குறைகளை நாம் அறிந்துணர முற்படுதல் சாலச் சிறந்தது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, என் பார்வையிலுள்ள “மரக்கட்டையை” முதலில் அகற்றி, பிறருக்கு அன்புடனும் இரக்கத்துடனும் வழிகாட்டும் மனிதராக என்னை மாற்றுவீராக. ஆமென்
எழுத்து
ஆர்.கே. சாமி
