1. 'ஓசி' என்றால் என்ன? பணம் தராமல் ஒரு பொருளை வாங்குவதற்கு ஒசி என்கிறோம். இது எப்படி அறிமுகம் ஆனது தெரியுமா? இது 0c என்ற இரு ஆங்கில எழுத்துதான். இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, தங்களது கம்பெனித் தபால்களை ON COMPANY SERVICE என்று குறித்து கட்டணம் செலுத்த மாட்டார்கள். இந்த Ocs என்பதே OC என ஆகி, ஒசி ஆகிவிட்டது,