சீனாவில் ஏற்பட்ட கலாசாரப் புரட்சி, சீனாவையே தலைகீழாய் மாற்றியது. மா.சே.துங்கின் உண்மையான கம்யூனிசம் சீனாவில் உருவாக வேண்டும் என்பதே இப்புரட்சியின் நோக்கம். லட்சக்கணக்கான சீன மாணவர்கள் இப்புரட்சியில் பங்கு பெற்றனர். அவர்கள் தங்களை 'செம்படை வீரர்கள்' என அழைத்துக் கொண்டனர். இந்த வீரர்கள் 'மாவோ' என அழைக்கப் படும் மா.சே.துங்கின் படத்துடன் சென்றனர்.