மன்னிக்கச் சக்தி வேண்டும் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

இருபத்து ஐந்து வயது நிரம்பிய கிறிஸ்டினா ஷாபோ ஓர் ஈராக்கிய கிறிஸ்தவ இளம்பெண். 1991ஆம் ஆண்டு வளைகுடாப் போரின்போது ஈராக்கை விட்டு வெளியேறியது இவரது குடும்பம். அப்போது ஷாபோ அவரின் தாய் வயிற்றில் எட்டு மாதக் குழந்தை.

ஈராக்கிலிருந்து ஷாபோ அவரின் குடும்பம் துருக்கியை நோக்கிக் கடந்து சென்றபோது, ஷாபோவின் மாமா மகளான எட்டு வயது ரிட்டா உட்பட பலர் வழியிலேயே இறந்தனர். இவரது மாமா தமது மகளை இறந்த இடத்தில் புதைக்காமல் தோளில் சுமந்துசென்று துருக்கியில் தாம் முகாமிட்டிருந்த இடத்தில் ஒரு மரத்தடியில் புதைத்தார். ஒரு மாதம் கழிந்து அதே மரத்தடியில் ஷாபோவின் அன்னை அவரைப் பெற்றெடுத்தார்.

2014ஆம் ஆண்டில் ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரமாகப் போரில் ஈடுபட்டபோது ஷாபோவின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஓர் உறவினரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, இவரது பலர் கடுமையான துன்பத்தை குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பலர் அனுபவித்து வந்தனர்.

இப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலையில் ஷாபோ சொல்கிறார்: "எனது குடும்பத்தையும் என் மக்களையும் துன்புறுத்தும் ஐ.எஸ். ஆள்களை மன்னிப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை. நான் என்னோடு பல நாள்கள் போராடினேன். மன்னிப்பதற்குச் சக்தி கேட்டுச் செபித்தேன். ஐ. எஸ். ஆள்கள் மனம் மாறுவதற்காகச் செபித்தேன். அவர்கள்மீது உலகம் இரக்கம் கொள்ளச் செபித்தேன். இது எனக்குக் கடுமையான சவாலாக இருந்தது. ஆனால், இது எனது தினசரிச் செபமாக மாறியது”. இவ்வாறு ஒரு கத்தோலிக்க ஊடகத்திடம் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிறர் செய்த குற்றத்தை மன்னிப்பது கடினமா? பிறர் செய்த துரோகத்தை மறப்பது கடினமா? இரண்டும் கடினம்தான். ஆயினும் அது முயன்றால் முடியும்.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image