எல்லாரையும் துரத்துகிறேன் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

சவால்களுக்கு மத்தியில் சளைக்காமல் போராடுகிறவர்கள் எல்லாரையும் வாழவைக்கிறார்கள்.

"வேடிக்கையைப் பாருங்கள், எல்லாரும் என்னைத் துரத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால், நான்தான் அவர்களைத் துரத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்”. 29 வயதான அமெரிக்க மாற்றுத்திறனாளி தத்யானா மேக்ஃபேடனின் நம்பிக்கை வார்த்தைகள் இவை.'

ரஷ்யாவில் முதுகெலும்பில் துளையுடன் இடுப்புக்குக் கீழே இயங்காத தன்மையுடன் பிறந்தவர் இவர். பிறந்த மூன்று வாரங்களுக்குள் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட, வறுமையின் காரணமாகக் குழந்தையின் தாய் அவளை ஆதரவற்றவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டிபோரா மேக்ஃபேடன் அரசுப் பணிகள் காரணமாக இரஷ்யாவுக்குச் சென்றபோது அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தத்யானாவைச் சந்தித்தார். அதிக நாட்கள் உயிர் வாழ வாய்ப்பில்லை என்றார்கள் மருத்துவர்கள். ஆயினும் அக்குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தார். காரணம், சிறுவயதில் டிபோராவுக்கு வந்த மர்மக் காய்ச்சல் அவரையும் மாற்றுத்திறனாளியாக மாற்றியிருந்தது. அதிலிருந்து மீண்டு நீச்சல் வீராங்கனையாக மாறி, அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் டிபோரா.

டிபோராவுடன் அமெரிக்கா சென்ற தத்யானா பலப் பயிற்சிகள் மேற்கொண்டார். நீச்சல், உடற்பயிற்சி, சக்கர நாற்காலி, கூடைப் பந்து, பனிச் சறுக்கு, ஹாக்கி எனப் பலப் பயிற்சிகள் மேற்கொண்டார்.

15 வயதில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோடை ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந் தத்யானா, இரண்டு ஆண்டுகளில் தங்கப்பதக்கம் பெற்று உலகச் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற சாம்பியனாக மாறினார். 2013ஆம் ஆண்டில் மட்டும் நான்கு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு அனைத்திலும் சாம்பியன் பட்டங்களை வென்றார். தற்போது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் தன்னம்பிக்கை ஊட்ட வகுப்புகள் நடத்தி வருகிறார்.


எழுத்து,
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image