இருநூறு குழந்தைகளின் தாய் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ ஜெர்சி மாநிலத்தில் 1986-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 - ஆம் நாள் பிறந்த மேகி டோய்ன் (Mggie Doyne) அவர்கள் தன் 18 - வது வயதில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கல்லூரிப் படிப்பைத் தொடர்வதற்குமுன் ஓராண்டு விடுமுறை எடுத்து உலகைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினார். இந்தியாவுக்கு வந்து சேர்ந்த இளம்பெண் மேகி அவர்கள், இமயமலை அடிவாரத்தில் தனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

"நான் ஒருநாள் சாலையில் நடந்து சென்ற வேளையில் ஒரு சிறுமி அவளது வயதுக்கு மீறிய சுமையை முதுகில் சுமந்தவண்ணம் எனக்கெதிரே வந்தாள். என்னைக் கண்டு மிக அழகாகப் புன்னகை செய்தாள். அவளது பெயர் இலக்கோரா என்பதையும் அவள் ஓர் அனாதை என்பதையும் அறிந்தேன். அச்சிறுமி ஒவ்வொரு நாளும் ஊருக்குள் சென்று பேருந்தில் வந்திறங்கும் பொருள்களை மலையுச்சியில் இருக்கும் தன் கிராமத்திற்கு எடுத்துச் சென்றாள். ஒருநாளில் இரண்டு அல்லது, மூன்று முறை அவ்வாறு சுமைகளை எடுத்துச் செல்லும் அச்சிறுமி தனக்குக் கிடைக்கும் 1 அல்லது 2 டாலர் ஊதியத்தைக் கொண்டு தன் தம்பி, தங்கைக்கு உணவளித்து வந்தாள்.

நேபாளத்தில் நிகழ்ந்துவந்த உள்நாட்டுப் போரினால், இலக்கோரா போன்ற பல்லாயிரம் குழந்தைகள், அனாதைகளாக வாழ்கின்றனர் என்பதை அறிந்தேன். மற்றொரு நாள் ஹீமா என்ற 7 வயது சிறுமி கல்லுடைத்துக் கொண்டிருந்ததையும் கண்டேன். அவளும் அனாதை என்பதை அறிந்த நான், உலகில் வாழும் 8 கோடி அனாதைக் குழந்தைகளுக்கு என்னால் எதுவும் செய்ய இயலாமல் போகலாம். ஆனால், இந்த இரு குழந்தையின் வாழ்வில் என்னால் என்ன மாற்றத்தை உருவாக்க முடியும் என நினைத்தேன். என் வங்கி சேமிப்பில் வைத்திருந்த 5000 டாலர்களைக் கொண்டு நேபாளத்தில் கோப்பிலா பள்ளத்தாக்கில் ஓர் இடத்தை வாங்கி, 5 ஆண்டுகளில் அவ்விடத்தில் ஒரு குழந்தைகள் காப்பகத்தையும், பள்ளியையும் உருவாக்கினேன்" என்றார்.

ஆண்டு அவருக்கு 'CNN Hero' அதாவது CNN நாயகர் என்ற விருதை அவரது பணியைப் பாராட்டி CNN செய்தி நிறுவனம் 2015 ஆம் வழங்கியது. 32 வயதான இளம்பெண் மேகி அவர்கள் தற்போது 200 க்கும் அதிகமான குழந்தைகளுக்குக் கல்வி வழங்கி வருகிறார்.

முடியாத பாசம் உனக்காக அழும் விழிகள்
நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் - "அம்மா.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image