மதிப்பு.. | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

மதிப்பு...
வற்புறுத்திப் பெறுவது அல்ல; தானாக வந்து சேருவது. 
அது ஒரு சிறந்த முதலீடு...
எவ்வளவு கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கு வட்டியோடு பெறுவீர்கள்!

வாழ்க்கை மிகக் குறுகியது; உங்களை அன்பு செய்யாதவர்கள், மதிப்பளிக்காதவர்கள்,  பாராட்டாதவர்கள்,  உங்கள் சிறப்பை அறியாதவர்கள் போன்றோரை எண்ணி வேதனைப்படுவதை விட்டுவிட்டு, அதை உங்களுக்கு அளிப்பவர்களோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்!

அறிவு உங்களுக்கு ஆற்றலை அளிக்கும்; உங்கள் பண்புதான் உங்களுக்கு மதிப்பைப் பெற்றுத் தரும்!
உங்களை மதிப்பவர்களை மதியுங்கள்; மதியாதவர்களையும் மதியுங்கள். அதுவே உங்கள் மதிப்பை உயர்த்தும்!

நீங்கள் அன்பு செய்பவரையும் உங்களை அன்பு செய்பவரையும் மதிக்கத் தவறாதீர்கள். அன்பின் சிறந்த வெளிப்பாடு மதிப்பு!
உறவு வளர பரஸ்பர மதிப்பு மிகவும் அவசியம்! மதிப்பளியுங்கள்... மதிப்புமிக்க வாழ்க்கையைப் பெற்று மகிழ்வீர்கள்! 

வாழ்க வளமுடன் நலமுடன்