நற்குணங்கள் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 22.11.2024
நற்குணங்களை அடைய நாம் முயற்சி செய்ய வேண்டும். ஆடம்பரத்தால் என்ன பயன் இருக்கிறது, நல்ல குணங்களை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
நல்ல குணங்களால் கிடைக்காதது எது? நல்ல குணங்களால் அடைய முடியாதது எதுவுமில்லை.
நல்ல குணங்களை அடைய எப்போதும் நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
நல்ல குணங்களால் தான், உயர்ந்த நிலையை நாம் அடைய முடியும். உயர்ந்த ஆசனத்தால் அல்ல.
நற்குணங்களே ஒருவனுக்கு அழகு தரும். நற்குணங்கள் ஒருவனுக்கு பெருமை தரும், உயர்வு தரும்.
வெளித்தோற்றத்தால் பயனில்லை. நற்குணங்கள் எங்கோ அங்கே அழகு மிளிரும், அழகு ஒளிரும்.
பழுத்த பழங்கள் உடைய மரங்கள் தாழ்ந்து இருக்கும்.
நற்குணங்கள் உடையோர் அது போலப் பணிந்திருப்பர்.
குணம் இல்லாத இடத்தில் அழகு பாழ். ஒருவனுடைய நிலையை நிர்ணயிப்பது அவனது குணங்களே. நல்ல குணங்களை தொடர்ந்து கடைபிடிப்பதால் தான் அது வளர்ந்து பயன் தரும்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
பாடப்பாட ராகம் மூட மூட ரோகம்.
ஆகவே சிந்திப்போம் செயல்படுவோம் பயன் பெறுவோம் மற்றவருக்கும் பயனுள்ளவராய் நடந்து கொள்வோம்.
வாழும் காலம் சிறிது அதில் ஊர் போற்ற பார் போற்ற பேர் பெற்று வாழ்வோம்.
வாழ்வாங்கு வாழ்வோம்!!!
வாழும் வகையறிந்து வாழ்வோம்!!!
நல்ல குணங்கள் பெற்று மிளிர்வோம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எல்லாருக்கும் எல்லா நன்மைகளும் நன்னெறியும் நற்பண்புகளும் நற்சிந்தனைகளும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி